மனித நேயத்தை குழி தோண்டிப் புதைத்தவர்களின் செயல்: கம்பிகளினால் கட்டப்பட்ட மாடுகள் மீட்பு

breaking
  மாந்தை மேற்கு சன்னார் பகு­தியில் கேபில் கம்­பி­க­ளினால் கட்­டப்­பட்டு உயி­ருக்குப் போரா­டிய நிலையில் மூன்று மாடுகள் மீட்­கப்­பட்­டுள்­ளன. இப்­ப­கு­தியில் உள்ள காட்டுப் பகு­திக்கு மேய்ச்­ச­லுக்­காகச் செல்­லு­கின்ற மாடுகள் அங்­குள்ள மேய்ச்சல் தர­வையை அண்­டிய பகு­தி­களில் இனம் தெரி­யாத நபர்­க­ளினால் தொடர்ச்­சி­யாக கம்­பிகள் மூலம் கட்டி அவற்றை மரங்­களில் கட்­டு­வ­தாக கால்­நடை உரி­மை­யா­ளர்கள் கவலை தெரி­வித்­துள்­ளனர். இதனால் மாடுகள் திரும்பிச் செல்ல முடி­யாத நிலை ஏற்­ப­டு­வ­தோடு, கம்பி கழுத்தை இறுக்கு­கின்ற சந்­தர்ப்­பத்தில் மாடு உயி­ரி­ழக்கும் சம்­ப­வமும் இடம்­பெ­று­கின்­றது. அவ்­வாறு பல மாடுகள் உயி­ரி­ழந்­துள்­ள­தோடு பல மாடுகள் இனம் தெரி­யாத நபர்­க­ளினால் சட்­ட­வி­ரோ­த­மாக கடத்திச் செல்­லப்­ப­டு­வ­தாகவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இந்த நிலை­யிலே நேற்று புதன் கிழமை காலை 3 மாடுகள் கேபில் கம்­பி­யினால் கட்­டப்­பட்டு உயி­ருக்கு போரா­டிய நிலையில் மாட்டின் உரி­மை­யா­ளர்­க­ளினால் மீட்­கப்­பட்ட சம்­பவம் தொடர்­பாக அடம்பன் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்ள போதும் அடம்பன் பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என பாதிக்கப்பட்டகால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.