உதயங்க வீரதுங்கவிடம் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் விசாரணை!

breaking
ரஸ்யாவிற்கான முன்னாள் உயர்ஸ்தானிகர் உதயங்க வீரதுங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். உதயங்க வீரதுங்க மீண்டும் நாடு திரும்பியுள்ள நிலையிலேயே இவ்வாறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மிக் விமான கொள்வனவின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்து உதயங்க வீரதுங்கவிற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பாக அவரை கைது செய்யுமாறு நீதிமன்றத்தினால் திறந்த பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.