மன்னார் மனித புதைகுழி ; மீட்­கப்­பட்ட பொருட்­களின் பாது­காப்பு அறை தொடர்பில் பொலிஸ் விசா­ரணை

breaking
2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் மன்னார் நகர் மத்­தியில் ச.தொ.ச. கட்­டு­மான பணி­யின்­போது கண்டு பிடிக்­கப்­பட்ட மனித புதை­கு­ழியில் மீட்­கப்­பட்ட தட­யப்­பொ­ருட்­களை பகுப்­பாய்வு செய்­வ­தற்­காக தரப்­ப­டுத்த சென்­ற­போது மனித புதை­குழி அகழ்வுப் பணிக்கு பொறுப்பு வாய்ந்த அதி­கா­ரியின் பொறுப்­பி­லி­ருந்த பாது­காப்பு அறைக் கதவு கைபிடி உடை­ந்தும் யன்னல் திறந்­தி­ருந்தும் காணப்­பட்­டதால் பொலிஸ் விசா­ர­ணைக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது. அத்­துடன் இவ் வழக்கில் முன்­னி­லை­யான அரச சட்­ட­வாதி காணாமல் ஆக்­கப்­பட்டோர் உற­வினர் சார்­பாக ஆஜ­ரா­கி­யி­ருந்த சிரேஷ்ட சட்­டத்­த­ரணி மீது தகாத வார்த்­தையை பிர­யோ­கித்­த­மையால் சட்­டத்­த­ர­ணிகள் வெளி­ந­டப்பு செய்தனர். 2018 மார்ச் மாதம் மன்னார் நகரில் கண்டு பிடிக்­கப்­பட்ட மன்னார் ச.தொ.ச. புதை குழி வழக்கு கடந்த திங்கட் கிழமை மன்னார் மாவட்ட நீதிவான் நீதி­மன்றில் நீதி­பதி மாணிக்­க­வா­சகர் கணே­ச­ராஜா முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு எடுக்­கப்­பட்­டது. இவ் வழக்கில் நீதி­மன்ற பாதுகாப்பில் இருந்து வரு­கின்ற மன்னார் ச.தொ.ச. புதை குழியில் இருந்து கண்­டெ­டுக்­கப்­பட்ட சான்றுப் பொருட்­கள் பிரித்­தெ­டுக்­கப்­ப­டு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­யா­கவே இவ் வழக்கு விசா­ர­ணைக்கு எடுக்­கப்­பட்­டது. இச் சம­யத்தில் காணாமல் ஆக்­கப்­பட்­டோரின் உற­வி­னர்கள் சார்பில் சட்­டத்­த­ர­ணி­க­ளுடன் இந்த புதை­குழி அகழ்­வுக்கு பொறுப்­பு­வாய்ந்த அதி­கா­ரி­யாக கட­மை­யாற்­றிய சட்­ட­வைத்­திய நிபுணர் வைத்­தி­ய­க­லா­நிதி ராஜபக் ஷ சார்பில் முதன்­மு­த­லாக அரச சட்­ட­வாதி ஒரு­வரும் இவ்­வ­ழக்கில் ஆ­ஜரா­கி­யி­ருந்தார். இவ் வழக்­கை­ய­டுத்து அன்­றைய தினம் காலை பத்து மணி­ய­ளவில் தடையப் பொருள் வைக்­கப்­பட்ட அறைக்கு சென்று தட­யப்­பொ­ருட்­களை பிரித்­தெ­டுப்­ப­தற்­கா­க­மு­யன்ற வேளையில் சான்று பொருட்கள் வைக்­கப்­பட்­டி­ருந்த அறையின் கதவு கைபிடி உடைந்­தி­ருந்­தமை அவ­தா­னிக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் அவ் அறையின் யன்னல் கதவும் திறந்­தி­ருந்­ததும் கவ­னிக்­கப்­பட்­டது. இதைத் தொடர்ந்து காணாமல் ஆக்­கப்­பட்ட உற­வி­னர்கள் சார்­பாக ஆஜ­ரா­கி­யி­ருந்த சட்­டத்­த­ர­ணிகள் இந்த நிலையில் குறித்த தடயப் பொருட்­களை பகுப்­பாய்­வுக்­காக பிரித்­தெ­டுக்க முடி­யாது எனவும் இது விட­ய­மாக கைரேகை எடுக்­கப்­பட வேண்டும் என்றும் கோரினர். இது விட­ய­மாக பொலிஸ் விசா­ர­ணை­யுடன் ஆய்வு ஒன்றும் மேற்­கொள்ள வேண்டும் எனவும் தெரி­விக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து தடயப் பொருட்­களை பிரித்­தெ­டுக்கும் நட­வ­டிக்கை தடைப்­பட்­டது. பின் இவ் வழக்கு செவ்வாய்க் கிழமை மீண்டும் மன்னார் மாவட்ட நீதிவான் நீதி­மன்ற நீதி­பதி மாணிக்­க­வா­சகர் கணே­ச­ராஜா முன்­னி­லையில் காலையில் விசாரணைக்கு வந்தது. அப்­பொ­ழுது இரு தரப்பு சட்த்­த­ர­ணி­களின் மத்­தியில் வாதப் பிரதி வாதம் இடம்­பெற்­றது. இந்த வேளையில் அரச சட்­ட­வாதி காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் சார்பில் வாதிட்ட சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணியை நோக்கி தகாத வார்த்தை பாவித்­த­மையால் இவ் வழக்கில் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் சார்பில் முன்­னி­லை­யான சட்­டத்­த­ர­ணி­களும் அத்­துடன் மன்னார் சட்­டத்­த­ர­ணிகள் அனை­வரும் அரச சட்­ட­வாதி பாவித்த தகாத வார்த்­தையை வாபஸ்­பெற வேண்டும் எனவும் சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணி­யிடம் மன்­னிப்பும் கோர வேண்டும் என தெரி­வித்து மன்­றை­விட்டு வெளி­யே­றினர். பின் அரச சட்­ட­வாதி தான் பிர­யோ­கித்த தகாத வார்த்­தையை வாபஸ் வாங்­கி­ய­துடன் சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணி­யிடம் மன்­னிப்பும் கோரி­யதைத் தொடர்ந்து வெளி­யே­றிய சட்­டத்­த­ர­ணிகள் மீண்டும் மன்­றுக்குள் பிர­வே­சித்­தனர். அத்­துடன் இந்நீதி­மன்றில் சரி­யான ஒரு மொழி பெயர்ப்­பாளர் இல்­லை­யென்­ப­தையும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டதைத் தொடர்ந்து மன்னார் மேல் நீதி­மன்­றி­லி­ருந்து 1.15 மணி­ய­ளவில் மொழி பெயர்ப்­பாளர் ஒருவர் மன்­றுக்கு அழைக்­கப்­பட்­டி­ருந்தார். இவ் வேளையில் அரச சட்­டத்­த­ரணி மன்றில் தெரி­விக்­கையில், காணாமல் ஆக்­கப்­பட்டோர் சார்­பாக சட்­டத்­த­ர­ணிகள் ஆஐ­ராக முடி­யாது எனவும் இதற்­கான தகுதி இவர்­க­ளுக்கு கிடை­யாது எனவும் தெரி­வித்து தனது வாதத்தை மன்றில் முன்­வைத்தார். இதைத் தொடர்ந்து காணாமல் ஆக்­கப்­பட்டோர் சார்­பாக ஆஜ­ரா­கிய சட்­டத்­த­ர­ணிகள் தமது சமர்ப்­ப­ணத்தை பிறி­தொரு திக­தியில் மன்றில் சமர்­ப்பிக்க இருப்­ப­தாக தெரி­வித்­ததைத் தொடர்ந்து இவ் வழக்கு மீண்டும் 25ஆம் திக­திக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது. நீதி­மன்ற வளா­கத்தில் அமைந்­துள்ள கட்­டட அறை­யொன்றில் வைக்­கப்­பட்­டுள்ள இந்த தட­யப்­பொ­ருட்கள் இன்னும் நீதி­மன்றில் ஒப்­ப­டைக்­கப்­ப­டாத நிலையில் மனித புதை­கு­ழிக்­கான பொறுப்­ப­தி­காரி சட்­ட­வைத்­திய நிபுணர் ராஜ­பக்ஷ பொறுப்­பிலே இருந்து வரு­வதும் குறிப்பிடத்தக்கது. மார்ச் மாதம் 2018இல் மன்னார் நகர மத்தியில் கண்டுபிடிக்கப்பட்ட இப்புதைகு ழியில் 276 மனித எலும்புக்கூடுகள் அடையாளங்காணப்பட்ட நிலையில் 269 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப் பட்டதுடன் இங்கு மீட்கப்பட்ட தடயப் பொருட்களும் மன்னார் நீதிவான் நீதிமன்றில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன. இவ் அறை உடைந்திருந்த விடயம் தொடர்பாக பொலிஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன் இவ் அறை தற்பொழுது சீல் வைக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.