நிர்பயாவை போன்று கற்பழிக்கப்பட்ட மற்றுமோர் மாணவி!

breaking
உத்தரபிரதேச மாநிலத்தில் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை நான்கு பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ள  சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள கல்லூரியில் எம்.பி.ஏ படிக்கும் மாணவி ஒருவர்  கல்லூரியில் இருந்து வீடு திரும்பியபோது 4 பேர் கொண்ட குழுவினரால்  கடத்தப்பட்டுள்ளார். பின்னர் மாணவியை 4 பேரும் சேர்ந்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியப்பின் தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பலத்த காயமடைந்த மாணவி மீரட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை டெல்லியில் மருத்து மாணவியான நிர்பயா பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு பின் ஓடும் பேருந்தில் இருந்து தூக்கியெறியப்பட்டார். இதன்பின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கு  தூக்குதண்டனை அளிக்கப்பட்டு நிலுவையில் உள்ள நிலையில், மற்றுமோர் சம்பவம் அரங்கேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.