உலக அரசியலில் ஈழத்தமிழர்கள் : வினாக்களிற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தெளிவான பதில்கள்

breaking
  உலக அரசியல் ஈழத் தமிழர்களினால் எப்படி கையாளப்பட வேண்டும் என்பதை உதாரணங்களுடன் விளக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.. கே: - வல்­ல­ர­சு­க­ளைப் பகைத்­துக் கொண்டு எப்­படி இதனை முன்­கொண்டு செல்­வது?   ப: - ரணில் மற்றும் - சிறி­சே­னவை வைத்து ராஜ­பக் ஷ ஆட்­சியை வீழ்த்­தி­யுள்­ளோம். நாளைக்கு அவர்­கள் திரும்பி வர­லாம். ராஜ­பக்­சாக்­கள் திரும்பி வந்­தால் இந்த இலங்கை விட­யத்தை சர்­வ­தேச அரங்­கில் உயி­ரு­டன் வைத்­தி­ருக்­க­வேண்­டும். ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் வைத்­தி­ருப்­ப­தற்கு விரும்­பி­னார்­கள். அதில் ஒரு பிர­யோ­ச­ன­மும் இல்லை என்­ப­தால் அங்கு வைத்­தி­ருக்க விரும்­பி­னார்­கள். சர்­வ­தேச அரங்­கில் வைத்­தி­ருப்­ப­தில் பிரச்­சி­னை­யில்லை. அதை எந்த இடத்­தில் வைத்­தி­ருக்­க­வேண்­டும் என்­பதை நாங்­கள்­தான் தீர்­மா­னிக்க வேண்­டும். பாதிக்­கப்­பட்ட தரப்­பா­கிய நாங்­கள் இலங்கை விட­யத்தை பாது­காப்­புச் சபைக்கு கொண்டு செல்ல வேண்­டும் என்று அழுத்­தம் கொடுத்­தி­ருந்­தால் வேறு வழி­யில்­லா­மல் கொண்டு சென்­றி­ருப்­பார்­கள். இன்­னொரு வழி­யும் இருக்­கின்­றது. மியன்­மா­ரும் இலங்கை போன்று ரோம் பிர­க­ட­னத்­தில் கையெ­ழுத்­தி­ட­வில்லை. ரோம் பிர­க­ட­னத்­தில் கையெ­ழுத்­தி­டா­விட்­டால் நேர­டி­யாக சர்­வ­தேச நீதி­மன்­றுக்­குச் செல்ல முடி­யாது. ஆனா­லும் மியன்­மார் விட­யத்­தில் புதிய அணு­கு­முறை கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. மியன்­மா­ரில் ரோஹிங்ய மக்­கள் திட்­ட­மிட்டு இன­அ­ழிப்­புச் செய்­யப்­ப­டும்­போது பலர் தப்பி வேறு நாடு­க­ளுக்கு அக­தி­க­ளா­கச் செல்­கின்­ற­னர். இவ்­வாறு அக­தி­க­ளா­கச் செல்­லும் மக்­களைப் பல நாடு­கள் ஏற்­றுக் கொள்­கின்­றன. அவர்­க­ளின் புக­லி­டக் கோரிக்­கை­களை ஏற்­றுக் கொள்­கின்­றன. இவ்­வாறு ரோஹிங்ய மக்­களை ஏற்­றுக் கொள்­ளும் நாடு ரோம் பிர­க­ட­ னத்­தில் கையெ­ழுத்­திட்­டி­ருந்­தால், சர்­வ­தேச நீதி­மன்­றம் அந்த நாடு ஊடாக மியன்­மா­ருக்கு எதி­ரான விசா­ர­ணை­யைத் தொடக்­க­லாம். எங்­கள் தமிழ் மக்­கள் ரோம் பிர­க­ட­னத்­தில் கையெ­ழுத்­திட்ட எத்­த­ னையோ நாடு­க­ளுக்­குச் சென்­றி­ருக்­கின்­றார்­கள். போய் அங்கு தஞ்­சக் கோரிக்­கையை முன்­வைத்­துள்­ளார்­கள். இங்கு நடக்­கின்ற அநி­யா­யங்­களை முன்­னி­றுத்­தித்­தான் தஞ்­சக் கோரிக்­கையை முன்­வைத்­துள்­ளார்­கள். அந்த நாடு­க­ளும் அதனை ஏற்­றுக் கொண்டு அவர்­க­ளுக்கு புக­லி­டம் வழங்­கி­யுள்­ளன. பாது­காப்­புச் சபை, வீட்டோ அதி­கா­ரம் என்­ப­வற்­றைத் தாண்டி சர்­வ­தேச குற்­ற­வி­யல் நீதி­ மன்­றுக்­குச் செல்­லும் வழியை மியன்­மார் இன்று காட்­டி­யி­ருக்­கின்­றது. சட்­டத்­த­ரணி என்று பெயரை வைத்­துக் கொண்டு தத்­து­வம் பேசு­கின்ற கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ளர் எம்.ஏ.சுமந்­தி ர­னுக்கு இந்த அறிவு வர­வில்­லையா? இந்த விளக்­கம் அவ­ருக்­குத் தெரி­யாதா?   2,கே: - மக்­கள் தஞ்­ச­ம­டைந்­துள்ள நாடு­கள்­தானே சர்­வ­தேச குற்­ற­வி­யல் நீதி­மன்­றுக்கு கொண்டு செல்ல வேண்­டும்? ப: இல்லை. சர்­வ­தேச குற்­ற­வி­யல் நீதி­மன்­றம் நேர­டி­யாக விசா­ர­ணை­களை ஆரம்­பிக்­கின்­றது. 3,கே: - அப்­ப­டி­யா­னால் தமிழ் மக்­கள் எவ்­வ­ளவோ கால­மாக, ரோம் பிர­க­ட­னத்­தில் கையெ­ழுத்­திட்ட நாடு­க­ளில் தஞ்­ச­ம­டைந்­தும் சர்­வ­தேச குற்­ற­வி­யல் நீதி­மன்­றம் ஏன் விசா­ர­ணையை ஆரம்­பிக்­க­வில்லை? ப: - சர்­வ­தேச குற்­ற­வி­யல் நீதி­மன்­றி­லும் அர­சி­யல் இருக்­க­லாம். எந்­த­வொரு இடத்­தி­லும் நீங்­கள் ஒரு கருத்­து­ரு­வாக்­கத்­தைச் செய்­ய­வேண்­டும். பாதிக்­கப்­பட்ட மக்­கள் அத­னைக் கேட்­க­வேண்­டும். அப்­பொ­ழுது சர்­வ­தேச சமூ­கம் வேறு­வ­ழி­யின்றி இதனை முன்­னெ­டுக்­கும். மியன்­மார் தொடர்­பில், ஹேக்­கில் உள்ள ஐ சி ­ஜே­ யில் ஆபி­ ரிக்க நாடு ஒன்று வழக்­குத் தாக்­கல் செய்­தது. ஒரு நாடு மியன்­மா­ருக்கு எதி­ராக வழக்­குத் தாக்­கல் செய்­தது. ஐ சி­ ஜே­யில் ஒரு நாடு­தான் வழக்­குத் தாக்­கல் செய்­ய­மு­டி­யும். முழு விசா­ரணை நடை­பெற்று, மியன்­மார் அரசு இந்­தக் கோணத்­தில்­தான் நடந்து கொள்­ள­வேண்­டும் என்று இடைக்­கா­லக் கட்­டளை கொடுக்­கப்­பட்­டுள்­ளது. இனப்­ப­டு­கொலை நடப்­பதை விசா­ரிக்­க­வேண்­டும் என்­பதை ஏற்­றுக் கொண்டு அந்த இனப்­ப­டு­கொ­லையை தவிர்த்­துக் கொள்­வ­தற்­காக இந்­த­வி­ட­யங்­களை நீங்­கள் செய்­ய­வேண்­டும் என்று இடைக்­கா­லக் கட்­ட­ளை­யைப் பிறப்­பித் துள்­ளது. எத்­த­னையோ வழி­கள் உள்­ளன. அவற்றை ஏன் பிர­யோ­கிக்­கத் தயா­ரில்லை?