அமெரிக்க செம்பியன் 2020 - மும்பை நடனக்குழுவிற்கு!

breaking

அமெரிக்காவில் 14வது முறையாக 2019 நடைபெற்ற அமெரிக்காஸ் கொட் ரலென்ற் (America’s Got Talent) நிகழ்வில் இந்தியாவில் மும்பையைச்சேர்ந்த V. Unbeatable என்ற பெயரைக்கொண்ட நடனக்குழு பங்குபற்றி- இறுதிச்சுற்றுகளிற்கு வந்து - 4ம் இடத்தைப்பெற்றார்கள்.

இருந்தும் தங்கள் விடாமுயற்சியால் 2020 நடைபெற்ற AGT செம்பியன் போட்டியில் மீண்டும் வந்து பங்குபற்றினார்கள். இவ்வாண்டு முதல் சுற்றிலேயே நடுவர்களிடமிருந்து “மேலும் உங்களின் திறமைகளை அதிகரித்துக்கொண்டீர்கள்” என்று பல பாராட்டுகளைப் பெற்றார்கள். திங்கள் 17. பெப்ரவரி நடந்த இறுதிச்சுற்றில் “அமெரிக்கா செம்பியன்” என்ற விருதை V. Unbeatable தமதாக்கிக்கொண்டார்கள். “உலகின் மிகப்பெரிய மேடையிலேயே இவர்கள் வெற்றியடைந்துள்ளார்கள்” - என்று சமூகவலைத்தளங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.

“எம் குழுவில் பலர் மும்பை சேரிகளைச் சேர்ந்தவர்கள். மும்பையில் எம் வாழ்க்கை மிகவும் கடினமானது. ஆனால் V. Unbeatableன் குழுவில் இருப்பது எங்களுக்கு சிறகுகளை தருகின்றது- எங்களை பறக்க வைக்கன்றது. இந்த போட்டியின் ஊடாக எம் திறமையை வெளிக்காட்ட வந்தோம். எம் நாட்டிற்கும், எம் குடும்பத்திற்கும் பெருமை சேர்க்க வந்தோம். ஆனால் 2019 மிகவும் கவலையுடன் இந்தியாவிற்கு திரும்பிச்சென்றோம். ஆனாலும் எம் மக்கள் எம்மைப் பாராட்டி, மேலும் உற்சாகப்படுத்தினார்கள். வாழ்க்கை எமக்கு இரண்டு வாய்ப்புகளைத்தருகின்றது. இது எங்களுடைய இரண்டாவது வாய்ப்பு என எண்ணி- இன்று நாங்கள் அமெரிக்க செம்பியன் விருதைப்பெற்றதற்கு - எம் விடாமுயற்சியே காரணம்.” - என்று இந்த நடனக்குழு AGT நேர்காணலில் கூறியுள்ளது.

Via AGT V. Unbeatable Translation by R. Nithurshana