மகிந்த காப்பாற்ற சர்வதேச விசாரணையை இல்லாமல் செய்தது மைத்திரி- ரணில் அரசாங்கமே!

breaking

இலங்கை இராணுவத்தினருக்கும் மகிந்த ராஜபக்ச தரக்குக்கும் தண்டனை வழங்க சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட காலத்தில் மைத்திரி- ரணில் அரசாங்கத்தினால் ஜெனிவாவில் இணை அனுசரணை வழங்கப்பட்ட 30/1 பிரேரணை மூலம் அனைவரும் காப்பாற்றப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை உரையாற்றிய அவர் மகிந்த ராஜபக்சவை மின்சாரக் கதிரையில் இருந்து காப்பாற்றியது இந்த 30/1 தீர்மானமே என்றும் மங்கள சமரவீர கூறினார். வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன முன்வதை்த குற்றச் சாட்டுக்குப் பதிலளித்தபோதே மங்கள சமரவீர இவ்வாறு கூறினார். தமிழ் இனப் படுகொலை என்பதை மூடி மறைத்து இலங்கை அரசாங்கத்தையும் இலங்கைப் படையினரையும் காப்பாற்றும் நோக்கில் 2015 ஆம் ஆண்டு ஜெனீவாவில் 30/1 நிறைவேற்றப்பட்டிருந்தது. தமிழரசுக் கட்சி மாத்திரமே இதற்கு ஆதரவு வழங்கியிருந்து முன்னாள் வெளிவிவகார அமைச்சர் என்ற ரீதியிலும் 30/1 ஜெனிவா பிரேரணையை முன்வைத்த அமைச்சர் என்ற வகையிலும் இந்தத் தீர்மானத்தில் இருந்து புதிய அரசாங்கம் விலகவுள்ளதால் ஏற்படக் கூடிய விளைவுகள் பற்றிச் சொல்ல வேண்டும் என்றும் மங்கள சமரவீர கூறினார்.

இந்தத் தீர்மானத்தில் இருந்து விலகினால் 2017 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட காணமால் போனோர் தொடர்பான அலுவலகம மற்றும் இந்தத் தீர்மானத்தின் பிரகாரம் நிறைவேற்றப்பட்ட விடயங்களுக்கு என்ன நடக்கும் என்றும் மங்கள சமரவீர கேள்வி எழுப்பினர்.

இலங்கை இராணுவத்தினர் மற்றும் எமது சிங்கள அரசியல் தலைவர்களுக்குத் தண்டனை வழங்க சர்வதேச விசாரணை ஆரம்பிக்க ஏற்பாடாகியிருந்தது. இந்த நிலையிலேயே 30/1 யோசனையை மைத்திரி- ரணில் அரசாங்கம் முன் வைத்தது.

இதன் மூலமே மகிந்த ராஜபக்சவையும் அவரது சகாக்களையும் மின்சார கதிரையிலிருந்து காப்பாற்றப்பட்டனர். மைத்திரி- ரணில் அரசாங்கம் ஜெனிவாவில் கூறியது என்னவென்றால் வெளிநாட்டவர்கள் இலங்கையில் விசாரணை நடத்த வேண்டிய அவசியமே இல்லையென்று.

இலங்கை உள்ளக விசாரணைகளை நடத்தும் என்ற நிலைப்பாட்டையே ஜெனீவாலில் மைத்திரி- ரணில் அரசாங்கம் வலியுறுத்தியிருந்தது. இதன்மூலம் சர்வதேசத்தை இந்த பிரச்சினையில் தள்ளி வைத்தும் சர்வதேசத்துடன் இணைந்தும் மைத்திரி- ரணில் அரசாங்கம் செயற்பட்டிருந்தது என்று மங்கள சமரவீர கூறினார்.

தமிழ் இனப் படுகொலை என்பதை மூடி மறைத்து இலங்கை அரசாங்கத்தையும் இலங்கைப் படையினரையும் காப்பாற்றும் நோக்கில் 2015 ஆம் ஆண்டு ஜெனீவாவில் 30/1 நிறைவேற்றப்பட்டிருந்தது. தமிழரசுக் கட்சி மாத்திரமே இதற்கு ஆதரவு வழங்கியிருந்து.

தற்போது மகிந்த ராஜபக்ச இந்தத் தீர்மானத்தை ரத்துச் செய்வதால் ஈழத் தமிழ் மக்களுக்குப் பொரும் பாதிப்பு என்றதொரு மாயையை தமிரசுக் கட்சி தமிழ் மக்கள் மத்தியில் உருவாக்கி வருவதாக அவதானிகள் கூறுகின்றனர்.