கொழும்பில் குவிக்கப்பட்ட இராணுவ பொலிஸார்!

breaking
கொழும்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இராணுவ பொலிஸார் போக்குவரத்து கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிங்கள ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் மிகவும் நெரிசலான நுழைவு / வெளியேறும் இடங்களில் இராணுவ பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இனப்படுகொலையாளி  சவேந்திர சில்வாவினது வழிக்காட்டலின் கீழ் கொழும்பு நகரத்தினுள் வாகன நெருக்கடிகளை குறைப்பதற்காக இலங்கை பொலிஸாருக்கு உதவும் நோக்கத்துடன் இராணுவ பொலிஸாரை கடமைகளில் ஈடுபடுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நகர வீதிகளில் ஏற்படும் பாரிய நெரிசல்களை குறைக்கும் நோக்கத்துடன் இராணுவ பொலிஸார் வாரத்தின் ஏழு நாட்களிலும் காலை 6.00 – 10.00 வரையும் மாலை 4.00 – 7.00 மணி வரை நகர போக்குவரத்துக்கு கடமைகளுக்காக பொலிஸாருடன் கடமைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். இலங்கை இராணுவ பொலிஸாருக்குரிய நடமாடும் கார் மற்றும் 5 மோட்டார் சைக்கிள்கள் கண்காணிப்பு கடமைகள் நிமித்தம் வீதிகளில் ஈடுபடுத்தபடுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.