தெற்கு லண்டனில் லொறி ஒன்றிலிருந்து சடலம் கண்டெடுக்கப்பட்டது

breaking
தெற்கு லண்டனில் குப்பை சேகரிக்கும் லொறியின் பின்புறத்தில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. கம்பர்வெல் (Camberwell) பெத்வின் வீதியில் இன்று திங்கள்கிழமை அதிகாலை 5.35 க்கு குறித்த வாகனத்தின் பின்புறத்தில் சடலம் காணப்பட்டதை அடுத்து ஸ்தலத்துக்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். மேலும் அம்புலன்ஸ் சேவைக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். உயிரிழந்த நபர் குறித்து எந்த விவரங்களையும் ஸ்கொட்லான்ட் யார்ட் பொலிஸார் வழங்கவில்லை. எனினும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.