சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தாக்குதலின் பின் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்!

breaking

சுவிஸில் திசினோ மாநிலத்தில் முதலாவதாக கொரோனா வந்த நோயாளியின் நலமான உடல்நிலை காரணமாக அவர் வைத்தியசாலையில் இருந்து வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். நூறிற்கும் மேற்பட்டவர்கள் சுவிஸில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சுவிஸ் எயார்லைன்ஸ் பிலோறென்ஸ், மிலானோ, றோம் மற்றும் வெனெடிக் போன்ற இத்தாலி இடங்களிற்கும் சைனாவிற்கும் விமானப்பயணங்களை மார்ச் இறுதி வரை நிறுத்தியுள்ளது. செங்கால்லெனில் வர்த்தகத்துறையில் கற்கும் 1000ற்கும் மேற்பட்ட மாணவர்களிற்கு நடைபெறவிருந்த தேர்வுகள் பிற்போடப்பட்டுள்ளன. சுவிஸில் உள்ள மசூதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகை நிறுத்தப்பட்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூடும் கார்னிவல் நிகழ்வுகள், விளையாட்டுப்போட்டிகள், பாடல்- ஆடல் நிகழ்ச்சிகள் எனப்பல பிற்போடப்பட்டுள்ளன, சில நிறுத்தப்பட்டுள்ளன.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவால் யெனீவாவில் மார்ச் 09 நடைபெறவிருந்த மாபெரும் பேரணி நிறுத்தப்பட்டுள்ளதாக சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதேவேளை திசினோ கலைமாலை, இளையோர் உதைப்பந்தாட்டப்போட்டி போன்ற நிகழ்வுகளும் சுவிஸ் அரசின் அறிவித்தலிற்கு இணங்க பிற்போடப்பட்டுள்ளனவும்- குறிப்பிடத்தக்கதாகும். Via 20min.ch Translation by Nithurshana Raveendran