பேரவல நினைவு கூரல் ஏற்பாடுகள் பூர்த்தி!

breaking
முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் 9 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மே 18 , துக்கநாளாகவும், தமிழினப் படுகொலை நாளாகவும் வடக்கு மாகாண சபை பிரகடனம் செய்துள்ளது. தமிழினப் படுகொலைகள் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் மண்ணில் வழக்கம் போலவே இன்று நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கிணங்க இன்று காலை 11 மணியளவில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தில் பிரதான சுடர் ஏற்றப்படவுள்ளது. முன்னதாக இன்று காலை யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து மாணவர்கள் பாரிய உந்துருளிப் பேரணி ஒன்றை முள்ளிவாய்க்கால் நோக்கி நடத்தவுள்ளனர். இந்தப் பேரணி, முள்ளிவாய்க்காலை சென்றடைந்ததும்இ காலை 11 மணிக்கு நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி நிகழ்வு இடம்பெறும். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மைதானம் சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு, தயாராகியுள்ளது. நிகழ்விடத்தில் ஏற்பாடுகள் குறித்து வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இ அமைச்சர்கள்இ மாகாணசபை உறுப்பினர்கள். பல்கலைக்கழக மாணவர்களுடன் சென்று நேற்றய தினம் பார்வையிட்டிருந்தனர்.