வர்த்தக நிலையங்களை பூட்டி நினைவேந்தலுக்கு வலு சேர்க்கும் வர்த்தகர்கள்

breaking
முள்­ளி­வாய்க்­கால் நினை­வு­தி­ன­மான இன்று, மதி­யம் வரை வடக்­கில் வர்த்­தக நிலை­யங்­கள் மூடப்­பட்­டி­ருக்­கும். மதி­யத்­துக்­குப் பின்­னரே அவை திறக்­கப்­ப­டும் என்று சங்­கப்­பி­ர­தி­நி­தி­கள் தெரி­வித்­த­னர். முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந் தல் வடக்கு , கிழக்­கில் இன்று உணர்­வு­பூர்­வ­மாக இடம்­பெ­று­கி­றது. அதற்­காக வர்த்­தக நிலை­யங்­களை மதி­யம் வரை மூடி அஞ்­சலி செலுத்­து­மாறு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் அழைப்பு விடுத்­தி­ருந்­தார். இன்­றைய தின­மான மே 18 தினத்தை துக்­க­தி­ன­மாக வடக்கு மாகாண சபை தீர்­மா­னம் நிறை­வேற்றி அறி­வித்­துள்­ளது. இந்த நிலை­யில் வடக்­கில் வர்த்­தக நிலை­யங்­கள் மதி­யம் வரை மூடப்­பட்­டி­ருக்­கும். மதி­யத்­துக்­குப் பின்­னரே திறக்­கப்­ப­டும் என்று சங்­கப் பிர­தி­நி­தி­கள் தெரி­வித்­த­னர். வவு­னி­யா­வில் மதி­யத்­துக்­குப் பின்­னரே வர்த்­தக நிலை­யங்­கள் திறக்­கப்­ப­டும் வர்த்­த­கர் சங்­கம் தெரி­வித்­தது. மதி­யம் 12 மணி­வரை சகல வர்த்­தக நிலை­யங்­க­ளை­யும் மூடு­மாறு சகல வர்த்­த­கர்­க­ளை­யும் சங்­கம் கேட்­டுள்­ளது.