கல்வி அமைச்சின் நிதியை கோட்டை விட்ட மாகாண சபை, தடுத்து நிறுத்திய ஆளுனர்!

breaking
புத்­த­ளத்­துக்கு வழங்­கப்­ப­டும் வடக்கு மாகாண சபை­யின் அனைத்து நிதி­க­ளை­யும் உட­ன­டி­யாக நிறுத்­து­மாறு வடக்கு மாகாண ஆளு­நர் ரெஜினோல்ட் குரே, கல்வி அமைச்­சின் அதி­கா­ரி­களுக்கு நேற்று அதி­ரடி உத்­த­ரவு பிறப்­பித்­தார். வடக்கு மாகாண கல்வி அமைச்­சுக்கு ஒதுக்­கப்­ப­டும் பணம் நிய­திச் சட்­டங்­க­ளை­யும் மீறி தொடர்ந்­தும் மாகா­ணத்­துக்கு வெளி­யில் இயங்­கும் பாட­சா­லைக்­குச் சென்­று­கொண்­டி­ருக்­கி­றது. மாகாண கல்வி அமைச்­சர் மற்­றும் கல்­வித் திணைக்­கள அதி­கா­ரி­கள் தொடக்­கம் மாகாண சபை உறுப்­பி­னர்­கள் வரை மௌனம் காப்­பது தொடர்­பில் பத்­தி­ரிகை மூலம் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது. வடக்கு மாகாண கல்வி அமைச்­சுக்கு மாகாண வரவு செல­வுத் திட்­டத்­தில் குறித்­தொ­துக்­கப்­ப­டும் பணம் சில அதி­கா­ரி­கள், அர­சி­யல்­வா­தி­க­ளின் துணை­யு­டன் இர­க­சி­ய­மாக மாகா­ணத்­துக்கு வெளி­யில் பல அமைச்­சுக்­க­ளின் ஊடா­க­வும் நிதி கடந்த காலங்­க­ளில் புத்­த­ளத்­துக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டன. அவற்­றில் பல பின்­னர் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டன. இந்த நிலை­யில் வடக்கு மாகாண கல்வி அமைச்­சின் ஊடாக வயம்ப மாகா­ணத்­துக்கு நிதி செல்­லும் நட­வ­டிக்­கை­கள் இன்­று­வரை தொடர்ந்த வண்­ணமே உள்­ளன. இவற்­றைத் தடுக்க எந்த நட­வ­டிக்­கை­யும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. இவற்­றில் மன்­னார் மாவட்­டத்­தின் 6 பாட­சா­லை­கள் புத்­த­ளத்­தில் இயங்­கு­கின்­றன. அங்கு பணி­யாற்­றும. 142 ஆசி­ரி­யர்­கள் உள்­ளிட்ட செல­வுக்கு வடக்கு மாகாண சபை­யின் நிதி­யில் வரு­டாந்­தம் 200 மில்­லி­யன் ரூபா செல­வி­டப்­ப­டு­கின்­றது. அது தொடர்­பில் மாகாண சபை உரு­வாக்­கப்­பட்ட காலம் தொடக்­கம் சுட்­டிக்­காட்­டப்­பட்­ட­போ­தும் மாகாண சபை­யின் ஆயுள்­கா­லம் முடி­யும்­வரை நட­வ­டிக்கை எடுப்­ப­தாக தெரி­ய­வில்லை. இதே­போன்று வடக்கு மாகாண முன்­பள்­ளி­க­ளுக்கு எனத் தனி­யான நிய­திச் சட்­டம் ஒன்று உரு­வாக்­கப்­பட்டு அதன் கீழ் வடக்கு மாகா­ணத்­தில் உள்ள முன்­பள்ளி ஆசி­ரி­யர்­க­ளுக்கு மாதாந்­தம் 6 ஆயி­ரம் ரூபா சம்­ப­ளம் வழங்­கப்­ப­டு­கின்­றது. இதன் அடிப்­ப­டை­யி­லும் மாகா­ணத்­துக்கு வெளியே புத்­த­ளத்­தில் உள்ள 68 முன்­பள்­ளி­க­ளில் பணி­பு­ரி­யும் 94 ஆசி­ரி­யர்­க­ளுக்­கும் வடக்கு மாகாண சபை­யின் நிதி இன்­று­வரை வழங்­கப்­ப­டு­வ­தா­கச் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது. இவை தொடர்­பில் வடக்கு கல்வி அமைச்­சின் செய­லா­ளர், அதி­கா­ரி­களை அழைத்து வடக்கு ஆளு­நர் வின­வி­யி­ருந்­தார். அதன்­பின்­னர் புத்­த­ளத்­துக்­குச் செல்­லும் வடக்கு மாகாண நிதி­கள் அனைத்­தும் உட­ன­டி­யாக நிறுத்­தப்­ப­ட­வேண்­டும். அவ்­வாறு நிறுத்­திய பின்பு அது தொடர்­பான அறிக்­கை­யைச் சமர்ப்­பிக்க வேண்­டும். எந்­தக் கார­ணம் கொண்­டும் வடக்கு மாகாண நிதி வெளிச்­செல்ல அனு­ம­திக்க முடி­யாது. இது­வரை எத்­தனை வரு­டங்­க­ளாக எவ்­வ­ளவு நிதி இவ்­வாறு சென்­றது போன்ற விப­ரங்­களை சமர்ப்­பிக்­கு­மா­றும் ஆளு­நர் அதி­கா­ரி­க­ளுக்கு உத்­த­ர­விட்­டுள்­ளார்.