முக்கிய காரணமின்றி இத்தாலியில் வெளியே செல்லத்தடை- 12’000 பேருக்கு கொறோனா மற்றும் 827 பேர் பலி!

breaking

இன்று, வியாழன் 12 மார்ச் காலை 7 மணியளவில் “இத்தாலியில் 12’000 பேருக்கு கொறானா எனவும் இது வரை 827 பேர் இறந்துள்ளதாகவும்” இத்தாலி அரசு உறுதிப்படுத்தியுள்ளது. ஐரோப்பாவில் இத்தாலியே கொறானாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாகும். இங்கு வாழ்ந்து வரும் 60 மில்லியன் மக்களிற்கும் அநாவசியமாக வெளியே செல்வதற்கு இத்தாலி அரசு தடை விதித்துள்ளது.

வைத்தியசாலைக்குச் செல்வதற்கும், வேலைக்குச் செல்வதற்கும் மற்றும் பொருட்களை வாங்குவதற்கும் மட்டுமே இத்தாலியில் மக்கள் வெளியே செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள். வேலை காரணமாக மட்டுமே மக்கள் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், அருங்காட்சியங்கள் போன்றவை மூடப்பட்டுள்ளன. மேலும் மருந்தகங்கள் மற்றும் பலசரக்குக்கடைகளை விட ஏனைய அனைத்துக்கடைகளும் மூடப்பட்டுள்ளன.

பொருளாதாரம் மேலும் குறைந்து விடக்கூடாது என்பதற்காக மக்கள் தொடர்ந்தும் வேலைக்குச்செல்ல வேண்டும் என்று இத்தாலியின் பிரதமர் கொன்தே கூறியுள்ளார். இதன் விளைவாக பொது போக்குவரத்து தொடர்ந்தும் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இத்தாலி அரசு 20 பில்லியன் யூரோவை கொறோனாவின் தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்களிற்கு கொடுப்பதாக இத்தாலியின் பிரதமர் கொன்தே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Translation by Nithurshana Raveendran Via Tagesschau