பேரழிவை தாங்கிநிற்கும் ஜேர்மன் - இது தான் அவர்களின் பலம்!

breaking
உலகை உலுக்கிக்கொண்டிருக்கும் கொரோனா தொற்று ஜேர்மனியில் எல்லை மீறி போய்கொண்டிருக்கிறது குறிப்பாக  இன்றைய நிலவரப்படி 22 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்கிறது.ஆனாலும் இறப்பு வீதம் என்பது ஏனைய நாடுகளை விட மிகக்குறைவாகவே ஜேர்மனியில் பதிவாகியிருப்பது உலக நாடுகளை அதிசயப்பட வைத்திருக்கிறது. இதற்கான காரணங்களை ஆராய்ந்து பார்க்கையில் ஜேர்மனியில் இருக்கின்ற ஆய்வக வசதிகளும் இதற்கு ஒரு காரணமாக இருக்கின்றது குறிப்பாக ஒரு வாரத்திற்கு 160,000 சோதனைகளை நடத்தி முடிப்பதற்குரிய வசதிகள் இருப்பது நோய்தொற்றுக்குள்ளானவர்களை ஆரம்பகாலப்பகுதியிலேயே கண்டுபிடிக்ககூடியதாக உள்ளது. இரண்டாவது காரணம் ஜேர்மனியிடம் இருக்கின்ற உற்பத்திபலம் கொரோன நுண்கிருமிதொற்றினால் அதிகம் பாதிக்கப்படுவது நுரையீரலே அதன் காரணமாக  ஜேர்மனிய அரசு 10000 உயிர் காக்கும் வென்டிலேட்டர்களை தயாரிக்கும்படி உற்பத்தியாளர்களுக்கு கட்டளையிட்டிருக்கிறது அதுமட்டுமின்றி ஏற்கனவே 25,000 வென்டிலேட்டர்கள் ஜேர்மனி முழுவதும் மருத்துவமனைகளுக்கு வழங்கியிருக்கின்றன. மிகமுக்கியமா அதிகளவு நோயளர்களை உள்வாங்ககூடிய மருத்துவமனைகள் ஜேர்மனியில் இருப்பதும் அவர்களின் ஒரு பலமாகும்.அதற்கு அப்பால் ஜேர்மனிய அரசின் வேகமான தீர்மானங்களும் மாநில அரசுகளின் கட்டுப்பாடுகளும் ஜேர்மன் நாடும் அதன் மக்களும் இந்த பேரழிவை தாங்கிநிற்ககூடிய வல்லமை பெற்றிருக்க்கின்றன.