முன்மாதிரியான செயற்பாட்டில் இறங்கிய முல்லை. பிரதேச வைத்தியசாலை வைத்தியர்

breaking
  கொரோனா அச்சம் காரணமாக நாடளாவியரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் மாதாந்தம் கிளினிக் செல்லும் மக்களுக்காக அவர்களுடைய வீடுகளை தேடி சென்று தேவையான சிகிச்சை மற்றும் மருந்துகளை விநியோகிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி திருமதி நிரோசினி திலீபன் தலைமையில் வைத்தியர் நிரோசா சிரேஸ்ட தாதியர் சுகிந்தன், மருந்தாளர், பணியாளர்கள், வாகன சாரதி ஆகியோர் தங்களது வைத்தியசாலையில் மாதாந்த கிளினிக் பெறுவோருக்கு நடமாடும் சேவை மூலம் ஒவ்வொருவருடைய வீட்டு வாசலுக்கு சென்று பரிசோதித்து அவர்களுக்குரிய மருந்துகளை இன்று(25.03.2020) வழங்கி வருகின்றனர். இதை அறிந்து மருத்துவ தேவை நிமிர்த்தம் செல்லும் ஏனைய நோயாளிகளுக்கும் மருந்துகளை வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது. முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலையின் எல்லைக்குட்பட்ட உண்ணாப்பிளவு, கள்ளப்பாடு வடக்கு, கள்ளப்பாடு தெற்கு, வண்ணாங்குளம், மணற்குடியிருப்பு, முல்லைத்தீவு நகரம், கரைச்சிகுடியிருப்பு, செல்வபுரம், முள்ளிவாய்க்கால் கிழக்கு ஆகிய கிராமங்களுக்கு இந்த மருத்துவ சேவை வழங்கவுள்ளனர். இன்று ( 25.03.2020 ) உண்ணாப்புளவு, கள்ளப்பாடு வடக்கு, கள்ளப்பாடு தெற்கு, ஆகிய கிராமங்களுக்கு சென்று தங்களது மருத்துவ சேவையினை வழங்கியுள்ளனர்நாளை ஏனைய கிராமங்களுக்கு மருத்துவ சேவையினை வழங்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.