சுவிஸ் அரசு 20 பில்லியன் சுவிஸ் பிராங்கை இடர்கால நிவாரண நிதியாக அறிவித்துள்ளது!

breaking

“இன்றைய சுவிஸ் கூட்டாட்சி அரசின் மாநாட்டின் பிரகாரம் 20 பில்லியன் பிராங் இடர்கால நிவாரணத்திற்காக ஒதுக்கப்பட்டதை உறுதியாகக் கூறினார்கள். இது பொருளாதாரத்தையும், நிதியையும் சமநிலையாக இருக்க வேண்டும் என தேர்ந்தெடுக்கப்பட்ட தொகையாகும். நாங்கள் ஒழுங்காக தொழில் புரியும் அமைப்புகளைக்கொண்ட நாடு. மொத்தம் முன்னூறு வங்கிகளுடன் இணைந்து செயற்படுகிறோம். இதேவேளை சிறு தொழில் உட்பட நிறுவனங்களுக்கு நிதியாக கடனை பெற்றுக்கொள்பவர்கள் ஆகக்கூடிய தொகையாக 500’000 சுவிஸ் பிராங்கை பெற்றுக்கொள்ள முடியும். இது வட்டியில்லாக் கடனாக வங்கிகளூடாக பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் பெற்றுக் கொள்ளலாம். இதேவேளை நிறுவனங்கள் பிழையான தகவல்களை வழங்கி வட்டியில்லாக் கடனைப் பெற்றால் எதிர்காலத்தில் அப்படியான நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” என கூட்டாட்சி சபை யுஎலி மௌறர் தெரிவித்தார்.

இம்மாநாட்டில் சுவிஸ் தேசியவங்கியின் தலைவர் தோமஸ் யோர்டன் தெரிவிக்கையில் தாங்கள் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு கூட்டாட்சி அரசுடன் இணைந்து செயற்படுவதாகவும் பொருளாதார வீழ்ச்சியைத் தடுப்பதற்காகவே தாங்கள் இணைந்து வேலை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வேளை முதன்மையாக கொறோனாவினால் பாதிக்கப்பட்ட அனைவரிற்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துக் கொள்வதாகவும் இவர் தெரிவித்திருந்தார். மொழிபெயர்ப்பு: ர.நிதுர்ஷனா

Translation by R.Nithurshana via bag.admin.ch