கொவிட்- 19 வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோரிற்கு ஒரு மில்லியன் வழங்கினார்- பெடறெர் (Federer)!

breaking

சுவிற்சர்லாந்தில் கொறோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கென ஒரு மில்லியன் சுவிஸ் பிராங்கினை - சுவிசின் டென்னிஸ் விளையாட்டின் நட்சத்திர வீரரான ரோசெர் பெடறெர் வழங்கியுள்ளார்.

இது எல்லோருக்குமான சவால் எவரையும் உதவியற்று தனியாக விடக்கூடாது. அதற்காக நானும் மீர்க்காவும் (அவருடைய துணைவி) இணைந்து இந்தப் பணத்தை குறிப்பிட்ட வைரஸ் தாக்கத்தால் மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கே வழங்குகின்றோம் என பெடறெர் சமூகவலைத்தளம் ஊடாகத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் எமது ஆதரவு ஒரு தொடக்கம் மட்டுமே! இன்னும் பலர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவார்கள் என நாங்கள் நம்புகின்றோம் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். மொழிபெயர்ப்பாளர்: ர.நிதுர்ஷனா Translation by R.Nithurshana via Roger Federer (Instagram)