Take a fresh look at your lifestyle.

கொரோனா: சீனாவை விட ஸ்பெயினில் உயிரிழப்புகள் அதிகம்- 24 மணிநேரத்தில் 738 பேர் பலி!

கொரோனா தொற்று நோயால் ஸ்பெயினில் 24 மணிநேரத்தில் 738 பேர் பலியாகி உள்ளனர். ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,434 ஆக அதிகரித்துள்ளது. இது சீனாவின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையைவிட கூடுதலாகும்.

சீனாவில் கொரோனா தொற்று நோய் 3,285 மனித உயிர்களை விழுங்கியது. இப்போது உலக நாடுகளில் படுவேகமாக பரவி பல்லாயிரக்கணக்கான உயிர்களை குடித்து வருகிறது.

சீனாவுக்கு அடுத்ததாக இத்தாலியில்தான் கொரோனாவின் கொடூர தாக்கம் இருந்து வருகிறது. இத்தாலியில் ஒவ்வொரு நாளும் பல நூறு உயிர்கள் பலியாகி வருகின்றன. இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 683 பேர் பலியாகினர். இதனையடுத்து இத்தாலியில் மட்டும் உயிரிழப்பு எண்ணிக்கை 7,503 ஆக அதிகரித்துள்ளது. தற்போது இத்தாலியைவிட ஸ்பெயினில் திடீரென கொரோனாவால் பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. ஸ்பெயினில் 24 மணிநேரத்தில் 738 பேர் மரணித்துள்ளனர். மொத்தம் ஸ்பெயினில் 3,434 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகளில் சீனாவை விட ஸ்பெயினில் அதிகம். உலகளாவிய அளவில் இத்தாலிக்கு அடுத்ததாக ஸ்பெயினில் அதிக மரணங்கள் நிகழந்துள்ளன.

முக்கிய குறிப்பு:
#Coronavirus #Coronavirusnews #Coronanews #Corona #virus #coronavirus #Korona #Covid #COVID19 #Coronavirussrilanka #Coronasrilanka #Coronavirusswiss #Coronavirusswitzerland #Coronavirusdisease #COVID-9 #Newcoronavirus #Coronavirusswiss #Coronavirusswitzerland #Denmark #Canada #india #China #Italy #USA #Spain #Germany #Iran #France #SKorea #Switzerland