சுவிஸ் போதகருக்கு தொற்றுள்ளதை மறைக்க காவல்துறைக்கு இலஞ்சம், போலி மருத்துவ சான்றிதழ் காட்டவும் முயற்சி

breaking
  சுவிஸ் நாட்டிலிருந்து இலங்கை வந்த மதபோதகர் சிவராஜ்போல் சற்குணராஜாவுக்கு கொரோனா தொற்றுள்ளதை மறைப்பதற்காக யாழ்.பொலிஸாருக்கு பெருமளவு பணம் லஞ்சமாக வழங்கப்பட்டிருக்கலாம். என சந்தேகம் வெளி யிட்டிருக்கும் இலங்கை மருத்துவர் சங்கத்தின் வடமாகாண கிளை மருத்துவ அதிகாரிகள், குறித்த மதபோதகருக்கு கொரோனா தொற்று இல்லை. என போலியான மருத்துவ சான்றிதழ் ஒன்றை காண்பித்து நிரூபிப்பதற்கும் கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவருக்கு தொற்று உள்ளது என்பதை ஆளுநர் துாதரகம் ஊடாக நிரூபித்துவிட்டார் எனவும் மருத்துவ அதிகாரிகள் கூறியுள்ளார். மேற்படி விடயம் தொடர்பாக மருத்துவ அதிகாரிகள் சங்கம் தனது ஊடக அறிக்கையில் மேலும் கூறிப்பிட்டிருப்ப தாவது, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரனை, யாழ்ப்பாணப் பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் அதிகாரி மிரட்டிய சம்பவம் தொடர்பில் வடக்கு மாகாண மருத்துவ அதிகாரிகள் சங்கம் பதில் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளது. இதற்கு அமைவாக, இது தொடர்பான விசாரணைகள் பதில் பொலிஸ்மா அதிபரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறனதொரு நிலையில் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரை அழைத்து மன்னிப்புக் கோரினார். சுவிஸிலிருந்து யாழ்ப்பாணம் வந்த மதபோதகருக்கு கொரோனா தொற்று இல்லை என்று இரண்டு தடவைகள் ஊடக அறிக்கை வழங்கியதும் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரிதான். பிலதெனியா தேவாலயத்தால், மதபோதகருக்கு கொரோனா தொற்று உள்ளதை மறைக்க அவர்களுக்குப் பெருந்தொகைப் பணம் வழங்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. மேலும் அவர்கள் அதைப் போலி மருத்துவ சான்றிதழுடன் நிரூபிக்க முயற்சித்தார்கள். மதபோதகருக்கு கொரோனா தொற்று உள்ளது என்பதை, சுவிஸில் உள்ள இலங்கைக்கான தூதரகம் மூலம் வடக்கு மாகாண ஆளுநர் நிரூபித்தார். எனவே தேவாலய நிர்வாகத்தினர், ஆராதனையை ஒழுங்குபடுத்திய மதபோதகர் ஆகியோருடன் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரியும் தண்டிக்கப்பட வேண்டும் என்றுள்ளது.