தாயகமக்களுக்கு கரம் கொடுக்கும் யேர்மன் வாழ் மக்கள்

breaking

இலங்கையில் எந்தவிதமான முன்னேற்பாடும் இல்லாத நிலையில் நாட்டில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழீழத்தின் தலைநகரில் அன்றாடம் உழைத்து வருமானம் ஈட்டுவோரும் பெண்தலமையில் தாங்கும் குடும்பங்கள், மாற்றுதிரனாளிகள் என பலரும் இன்று பல,சிரமத்திற்கு முகம் கொடுத்து வருகின்றார்கள். இன் நிலையை அறிந்து கொண்ட ஜேர்மன் வாழ் மக்கள் இவ் மக்களின் பசியை போக்குவதற்காக 210000ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதியினை திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் மற்றும் வெருகல் பிரதேசத்தில் உள்ள:

லிங்கபுரம் 35 புளியடிசாலை 20 பெறருவெளி 25 மல்லிகைதீவு 25 சிவபுரம் 10 மேன்காமம்10 பள்ளிகுடியிருப்பு 15 சீனிவாசபுரம் 15 குடும்பங்களுக்கும் ஒரு குடும்பத்திற்கு 1350ரூபா பெறுமதியான உணவு பொதி வழங்கி வைக்கப்பட்டதுடன், வடதமிழீழத்தில் கொறோனோ வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்ட வேலையின் காரணமாக வேலையில்லாது வருமானம் இழந்து வறுமை காரணமாக பட்டினியை எதிர்நோக்கியுள்ள 200 குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரணப் பொருட்கள் பொலிகண்டி, ஓடக்கரை (பருத்தித்துறை) மற்றும் அல்வாய் ஆகிய பிரதேசங்களில் வழங்கப்பட்டது.

ஊரடங்குச் சட்டம் காரணமாக பொது மக்களை ஓரிடத்தில் ஒன்று கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளமையினால் நிவாரணப் பொருட்கள் வீடுவீடாக கொண்டு சென்ற விநியோகிக்கப்டப்டது.