லெப். கேணல் அசோக் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

breaking
லெப். கேணல் அசோக் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். விடுதலையின் கனவுகளுடன் வெற்றிகளுக்கு வித்திட்டு கல்லறையில் உறங்கும் மாவீரர்கள். 02.04.2000 அன்று கிளிநொச்சி மாவட்டம் முகாவில் பகுதியில் “ஓயாத அலைகள் – 03“ தொடர் நடவடிக்கையின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் அரசி / இதயா, மேஜர் லக்சனா, லெப்டினன்ட் மணிநிலா, 2ம் லெப்டினன்ட் கிளிமொழியாள், வீரவேங்கை கலைமகள், வீரவேங்கை பூங்கொடி, வீரவேங்கை தமிழிசை / மதுரா ஆகிய வேங்கைகளின் 20ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும்.
02.04.2000 அன்று “ஓயாத அலைகள் – 03“ தொடர் நடவடிக்கையின்போது இத்தாவில் பகுதியில் கண்டிவீதியை ஊடறுத்து நிலைகொண்டிருந்த வேளை இராணுவத்தின் முன்னேற்ற முயற்சியின்போது எமது மோட்டார் எதிரியின் கையில் அகப்படக்கூடாது என்பதற்காக மற்றவர்களை தளம் அனுப்பிவிட்டு மேட்டாருடன் குண்டை வெடிக்கவைத்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 2ம் லெப்டினன்ட் இசைவளவன் / நறுமுத்து அவர்களின் 20ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும்.
02.04.2000 அன்று கிளிநொச்சி மாவட்டம் பளைப் பகுதியில் “ஓயாத அலைகள் – 03“ தொடர் நடவடிக்கையின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்டினன்ட் புவீந்திரன் / மண்ணரசன், லெப்டினன்ட் கூத்தரசன் / நிலவன் ஆகிய வேங்கைகளின் 20ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும். 02.04.2000 அன்று கிளிநொச்சி மாவட்டம் முகமாலை பகுதியில் “ஓயாத அலைகள் – 03“ தொடர் நடவடிக்கையின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வீரவேங்கை குயில்வண்ணன், வீரவேங்கை தமிழன்பன் ஆகிய வேங்கைகளின் 20ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும்.
02.04.2000 அன்று மணலாறு கோட்டத்தில் மருதவோடைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் கிட்டு, மேஜர் அன்பு, 2ம் லெப்டினன்ட் ஜெயசீலன், 2ம் லெப்டினன்ட் சங்கர்ராஜ் ஆகிய வேங்கைகளின் 20ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும்.
02.04.2000 அன்று திருமலை மாவட்டம் மூதூர் பகுதியில் சிறிலங்கா கடற்படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்டினன்ட் இளமாறன் அவர்களின் 20ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும். 02.04.2000 அன்று மட்டக்களப்பு மாவட்டம் சின்னவத்தை பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வீரவேங்கை குருமதன் அவர்களின் 20ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும்.
02.04.2007 அன்று மட்டக்களப்பு மாவட்டம் கரடியனாறு கோட்ட கோப்பாவெளிப் பகுதியில் முன்னேற முயன்ற சிறிலங்கா இராணுவத்தினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் நவசங்கர், மேஜர் விழியரசன், மேஜர் ஜெகநாதன், லெப்டினன்ட் எழில்நிலா, 2ம் லெப்டினன்ட் நிமலன், வீரவேங்கை புவனேந்திரன், வீரவேங்கை சுடரோன், வீரவேங்கை செந்தமிழினி, வீரவேங்கை வசீகமாறன் ஆகிய வேங்கைகளின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
02.04.2007 அன்று வவுனியா மாவட்டத்தில் சிறிலங்கா இராணுவத்தினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் திராவிடன் / ஆரியன், லெப்டினன்ட் நெடியோன் ஆகிய வேங்கைகளின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
02.04.2007 அன்று யாழ். மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரவேங்கை சுபதீபன் அவர்களின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தாய்மண்ணின் விடிவிற்காக 02.04.2008 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் இளம்புலி, கப்டன் புரட்சித்தம்பி, கப்டன் அமலன், லெப்டினன்ட் கரிகாலினி / மதியருவி, லெப்டினன்ட் பரணி, லெப்டினன்ட் கதிரவன், லெப்டினன்ட் பகீரதன், லெப்டினன்ட் குயிலினி, 2ம் லெப்டினன்ட் போர்வாணன், 2ம் லெப்டினன்ட் இளங்கீரன், வீரவேங்கை பொய்கைக்கிளி ஆகிய வேங்கைகளின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். 02.04.2009 அன்று முல்லை மாவட்டம் புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருட னான நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் அசோக் அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும்.