நாடளாவிய ரீதியில் கொறோனாவினால் உயிரிழந்தவர்களிற்கு இறுதி வணக்கம் செலுத்தப்பட்டது! - சீனாவில்

breaking

04.04.2020 சனிக்கிழமை (இன்று) சீனாவில் காலை பத்து மணிக்கு மக்கள் அனைவரும் கொறோனா தாக்கத்தினால் உயிரிழந்த “தியாகிகள்” அனைவரையும், முன்னணி மருத்துவபணியாளர்களையும், மருத்துவர்களையும் மூன்று நிமிடங்கள் நினைவுகூறும் வகையில் இறுதி வணக்கம் செலுத்தினார்கள்.

அனைத்து நிகழ்வுகளையும் இந்நேரம் நிறுத்தி நாடு முழுவதும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. இவ்வேளை மகிழூர்திகள், தொடரூந்துகள், கப்பல்கள் மூலம் ஒலி எழுப்பப்பட்டன.

இந்த இறுதி வணக்கம் செலுத்துவது வருடாந்த “கிங்மிங் கல்லறை” விழாவுடன் ஆரம்பிக்கப்பட்டது. இந்த விழாவில் ஆண்டு தோறும் மில்லியன் சீன மக்கள் தங்களின் மதிப்பிற்குரிய முன்னோர்களை நினைவுகூறும் வகையில் இவ்விழா நடைபெறுகின்றது. இந்த விழாவின் போது சுடுகாடுகளில் கல்லறைகளை சுத்தம் செய்து, பூக்கள், உணவுகள் மற்றும் வேறு பொருட்கள் படைக்கப்பட்டு, தூப குச்சிகளையும் கொழுத்துவது சீனர்களின் பண்பாடாகும்.

கொவிட்- 19 வைரஸ் மேலும் பரவுவதை தடுக்கும் வகையில் மக்கள் பெரும்பாலும் வீடுகளில் இருந்தே இறுதி வணக்கம் செலுத்தியது குறிப்பிடத்தக்கதாகும். மொழிபெயர்ப்பு: ர.நிதுர்ஷனா Translation by Nithurshana Raveendran Source: FreeMalaysiaToday