இந்தியாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

breaking
அமெரிக்காவிற்கு ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை இந்தியா ஏற்றுமதி செய்யவில்லை என்றால் இந்தியா பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாததை உறுதிசெய்யும் நோக்கில் மலேரியா நோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் hydroxychloroquine மருந்து ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளது. ஆனால் அமெரிக்கா கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை பயன்படுத்திவருகிறது. அமெரிக்காவுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை ஏற்றுமதி செய்ய இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவே மலேரியாவை கட்டுப்படுத்தும் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்து உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளதாகவும் அமெரிக்காவுக்கு இந்தியா உதவி செய்ய வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.   பிரதமர் மோடியிடம் இதுகுறித்து தொலைப்பேசியில் பேசியதாக கூறிய ட்ரம்ப், அவர் கொரோனா வைரஸிலிருந்து மீள தங்களுக்கு உதவி செய்வதாக தெரிவித்ததாக குறிப்பிட்டார். தாங்கள் இந்தியாவுடன் நல்ல உறவை பேணி வருகிறோம். இந்தியாவும் அமெரிக்காவை மதிக்கிறது என்றும், அமெரிக்காவிற்கு மட்டும் இந்தியா ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்து ஏற்றுமதி தடையை நீக்க வேண்டும் என்றும் ட்ரம்ப் தெரிவித்தார். இந்தியா செய்துள்ள பொருளாதார ஒப்பந்தங்களை மதிக்க வேண்டும் என சுட்டிக்காட்டிய ட்ரம்ப், இந்தியா ஏற்றுமதியை தடை செய்தால் அதற்கான பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்தார்.