சீனாவில் கொறோனா தாக்கத்தினால் புதிய உயிரிழப்புகள் இல்லை!

breaking
புதிதான தொற்றுகள் குறைந்து வருவதாகவே சீனா அறிவித்துள்ளது. சீன சுகாதார அமைப்பின் தகவலின் படி 06.04.20 (நேற்று) 32 புதிய கொறோனா தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. 05.04.20 (ஞாயிறு) 39 கொறோனா தொற்றேற்புகள் உறுதிப்படுத்தப்பட்டு இருந்தன. நேற்றைய 32 தொற்றேற்புகள் அனைத்தும் வெவ்வேறு நாடுகளிற்குச்சென்று திரும்பி வந்த சீனா மக்களுக்கு என்பது குறிப்பிடத்தக்கது. இது வரை சீனாவில் மொத்தம் 81’740 பேருக்கு கொறோனா என உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 3331 பேர் இத்தாக்கத்தால் இறந்துள்ளனர். 77’167 பேர் மீண்டும் குணமாகியுள்ளனர். யனவரியில் இருந்து இன்றே முதலாவது நாளாக சீனாவில் கொறோனா தாக்கத்தின் புதிய உயிரிழப்புகள் எவையும் இல்லை என பேகிங் சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. சில வாரங்களாகவே சீனாவில் புதிய தொற்றேற்புகளும், உயிரிழப்புகளும் குறைந்து வருவது தெரிகின்றது. மொழிபெயர்ப்பு: ர.நிதுர்ஷனா Translation by Nithurshana Raveendran Source: 20min