யப்பானில் அவசரகாலப்பிரகடனம்

breaking
கொறோனா வைரஸ் அதிகம் தொடர்ந்தும் பரவி வருவதால் ரோக்கியோ மற்றும் யப்பானின் ஆறு பிரதேசங்களில் அவசரகாலப்பிரகடனத்தை யப்பான் அரசுத்தலைவர் சின்சோ அல்பே அறிவித்துள்ளார். 07.04.20 (இன்று) தொடக்கம் மே 6 வரை ரோக்கியோ, சீபா, கனகவா, சைத்மா, ஒசாகா, கியோகோ மற்றும் புகூவோகா ஆகிய இடங்களில் மக்களை வீடுகளில் இருக்குமாறு அறிவிக்கப்பட்டு பாடசாலைகள் மற்றும் பிற பணிமனைகளும் மூடப்படுகின்றன. எனினும் இத்தாலி அல்லது பிரான்ஸ் போன்ற நிலை யப்பானில் இல்லாததால் நிறுவனங்கள் அவசியம் மூடப்பட வேண்டிய அழைப்பாணையை இன்னும் அரசு அறிவிக்கவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கதாகும். மொழிபெயர்ப்பு: ர.நிதுர்ஷனா Translation by Nithurshana Raveendran Source: 20min