“இந்த பயங்கரமான குகையின் முடிவில் ஒரு வெளிச்சம் உள்ளது!” டோனால்ட் டிரம்ப்

breaking
தற்போதைய கொறோனா வைரஸின் தாக்கத்தினை கருத்தில் கொண்டு அமெரிக்காவின் ஜனாதிபதி டோனால்ட் டிரம்ப் “இது ஒரு முக்கியமான, கடினமான காலகட்டம்” என கூறினார். “இது ஒரு கடினமான வாரமாக இருக்கலாம். கடினத்திலும் மேலாக இருக்கலாம். ஆனால் இந்த பயங்கரமான குகையின் முடிவில் ஒரு வெளிச்சம் உள்ளது. நியூயோர்க் மற்றும் நியூ யேர்சியில் நிலைமை மிகவும் பதற்றத்தை கொண்டு வருகின்றது. இந்த வைரஸை நாங்கள் இல்லாமல் செய்வோம், எல்லோரும் இணைந்து இல்லாமல் செய்வோம்” என்கிறார் டிரம்ப். புதிய தொற்றேற்புகளின் எண்கள் நியூயோர்க்கில் குறைந்து வருவதை தேசிய தொற்றுநோய் நிறுவனத்தின் முதல்வர் அன்ரோனி போசி காண்பித்தார். “இது நாங்கள் தேடும் ஒரு நல்ல அடையாளம். அனைத்து துயரங்களிற்கு மத்தியிலும் நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகளும், முடிவுகளும் வேலை செய்யத் தொடங்கியுள்ளன. எனவே இதைத்தான் இப்பொழுது நாம் தொடர வேண்டும்” எனவும் அன்ரோனி கூறினார். மொழிபெயர்ப்பு: ர.நிதுர்ஷனா Translation by Nithurshana Raveendran Source: 20min