யாழ்மாவட்ட கிராமங்களுக்கு சுவிட்சர்லாந்து BLUE STAR SPORTS CLUP உதவி

breaking

07.04.2020 இன்று சுவிட்சர்லாந்து BLUE STAR SPORTS CLUP அமைப்பினரின் நிதிஅனுசரணையில் மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு அடம்பன் பிரதேச செயலக பிரிவிற்குட்ட விடத்தல் தீவு கிராமத்தில் கொவிற்- 19 (கொரோனா) தொற்றுநோய் ஆபத்தினால் வீடுகளில் முடங்கியிருக்கும் 90 குடும்பங்களிற்கு ரூபா 1650 பெறுமதியான உலர் உணவு பொதிகளினை எமது வெளிச்சம் நிறுவனத்தினூடாக வழங்கிவைக்கப்பட்டது. இப்பொதிகளினை வழங்குவதற்கு எமது நிறுவனத்துடன் ஒத்துழைத்த அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் மற்றும் தன்னார்வலர்களுக்கம் நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம். அத்தோடு எம் உறவுகளின் நலனில் அக்கறை கொண்டு நிதி ஆதரவு நல்கிய சுவிட்சர்லாந்து BLUE STAR SPORTS CLUP அமைப்பினருக்கு எமது நிறுவனம் சார்பாகவும் பயன் பெற்ற மக்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளினை தெரிவித்துக்கொள்கின்றோம்.