சுவிஸ் BLUE STAR SPORTS CLUB மன்னார் அடம்பன் கிராமங்களுக்கு உதவி

breaking

8.04.2020 இன்று சுவிட்சர்லாந்து BLUE STAR SPORTS CLUB அமைப்பினரின் நிதிஅனுசரணையில் மன்னார் மாவட்டத்தின் அடம்பன் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட காயங்கள் கிராமத்தில் கொவிற்- 19( கொரோனா )தொற்றுநோய் ஆபத்தினால் வீடுகளில் முடங்கியிருக்கும் 87 குடும்பங்களிற்கு வீடுகளுக்கு சென்று ரூபா 1650 பெறுமதியான உலர் உணவு பொதிகள் எமது வெளிச்சம் நிறுவனத்தினூடாக வழங்கிவைக்கப்பட்டது.

இப்பொதிகளினை வழங்குவதற்கு எமது நிறுவனத்துடன் ஒத்துழைத்த அனைத்து தன்னார்வலர்களுக்கும்நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அத்தோடு எம் உறவுகளின் நலனில் அக்கறை கொண்டு நிதி ஆதரவு நல்கிய சுவிட்சர்லாந்து Blue Star Sports Clubக்குஎமது நிறுவனம் சார்பாகவும் பயன் பெற்ற மக்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளைதெரிவித்துக்கொள்கின்றோம்.