சித்திரைப் பொங்கல் பற்றிய தகவல்!

breaking
சித்திரைப் பொங்கலின் போது, பண்டிகை கொண்டாட்டங்களை குடும்பத்திற்குள் மாத்திரம் மட்டுப்படுத்தி கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிறீலங்கா புத்தசாசனம், கலாசாரம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சு இந்த கோரிக்கையினை விடுத்துள்ளது. இது குறித்த விசேட அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை. அத்தியாவசிய தேவைகளுக்கான போக்குவரத்துகள் தவிர்ந்த அனைத்து மாவட்டங்களுக்கும் இடையிலான போக்குவரத்து முற்றிலுமாக தடைசெய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் பொருட்களை வீடுகளுக்கே விநியோகிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.