பெண்தலமை தாங்கும் குடும்பங்களுக்கு இத்தாலி தமிழ் மக்கள் உதவி

breaking

யுத்தத்தினால் தமது பூர்வவீக இடங்களை விட்டு இடம்பெயர்ந்து 30 வருடங்களுக்கு பின்பு தமது சொந்த இடமான தென்னைமரவாடி கிராமத்திற்கு மீள்குடியேறி தமது வாழ்வாதாரத்தை படிப்படியாக உயர்த்தி வாழ்வின் ஒரு உயர்ச்சியைக் காண பாடுபட்டு உழைத்த எம் மக்களின் வாழ்வில் திடீரென அடித்த புயற்காற்றைப்போல கொரோனா மீண்டும் அவர்களின் வாழ்வை சூரையாடி இல்லிடங்களிருந்து வெளியே செல்ல முடியாத நெருக்கடி இதன் காரணமாக தாயகத்தில் அன்றாடம் வருமானம் பெறும் தொழில்புரிந்தோர் மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்தோர் பெண்தலமை தாங்கும் குடும்பங்கள் பட்டினிச்சாவை எதிர்நோக்கி வரும்வேளையில் மக்களின் நிலையைகருத்திற் கொண்டு இத்தாலி வாழ் மக்கள் நிதிப்பங்களிப்புடன் 19.04.2020 அன்று 70 குடும்பங்களுக்கான உலர் உணவு பொதி வழங்கி வைக்கப்பட்டது.