
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை காட்டிலும் வேலையின்மை வறுமை பசி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 கோடிக்கும் மேல் உயர்ந்துள்ளதாக ஐநா சபை கவலை தெரிவித்துள்ளது.
சீனாவின் வுஹான் மாகணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் வைரஸ் தொற்றால் 25 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு 1,70,000க்கும் அதிகமானோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
பாதிப்புகளை கட்டுப்படுத்த பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்கை முடங்கியுள்ளதோடு சர்வதேச பொருளாதாரமும் வரலாறு காணாத சரிவை சந்தித்து வருகிறது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் செய்வதரியாது திணறி வருகின்றன. இதற்கிடையே ஊரடங்கால் அனைத்து தொழில்துறைகளும் முடங்கியுள்ளதால் வேலையிழப்பு வறுமை, உள்ளிட்ட காரணங்களால் மக்கள் பாதிப்புக்குள்ளாகி வருவதாக தினம் தோறும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை காட்டிலும் வேலையின்மை வறுமை பசி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளதாக ஐநா சபை அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவால் 25 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வறுமை பசி உள்ளிட்ட காரணங்களால் 25 கோடிக்கும் அதிகமான மக்கள் சிக்கித்தவித்து வருவதாக தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை வரும் காலங்களில் உயரக்கூடும் எனவும் ஐநா கவலை தெரிவித்துள்ளது.