சுவிஸ் றோயல் விளையாட்டுக்கழகம் கிளிநொச்சி மாவட்டத்தில் உதவி

breaking

சுவிஸ் றோயல் விளையாட்டுக்கழகத்தின் நிதி அனுசரணையில் தமிழர் தாயகப் பகுதிகளில் கொரோனா தொற்று நோய்காரணமாக வீடுகளில் முடக்கப்பட்டிருக்கும் அன்றாடம் கூலித்தொழில் செய்து வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கும் கிளிநொச்சி மாவட்டம் புலோப்பளை, கச்சாய்வெளி பளைநகரம்,முகாவில் வண்ணங்கேணி, ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள், உழைப்பாளர்களை இழந்த குடும்பங்கள் என இதுவரை உதவிகள் கிடைக்காத 102 குடும்பங்களுக்கு முதல் கட்டமாக ரூபா ஆயிரத்து எண்ணூறு (1800)பெறுமதியான உலர் உணவு பொதிகள் 09.05.20 இன்று வழங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு நிதி உதவி வழங்கிய Swiss Royal விளையாட்டுக்கழக நிர்வாகிகள், வீர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கும் தாயக மக்களின் சார்பில் நன்றி.