Take a fresh look at your lifestyle.

உங்களுக்கான எனது பதில்.


உங்களுக்கான எனது பதில்.

யுத்த மேகங்களின்
இருளையும் இருளாக்கியது …
பிரிவின் வலிகள்..
மண்ணில் வழிந்தோடிய
குருதியின் சிகப்பு …
இழந்தவர்கள் …..
பிரிந்தவர்…
கண்களில் தெரிந்தது….
கண்ணிருந்தும் பாராமல்
காதிருந்தும் கேளாமல்
கால்களில் இடறிய….
உயிருள்ள ….
உயிரற்ற…
உடலங்களை…கடந்தும் ..
மிதித்தும்.. நடந்தோம்.
அன்று காரணம் இருந்தது.
தள்ளும் அலைகளால்
தள்ளப்பட்டு வந்தோம்.
நின்று பார்க்க முடியவில்லை..
ஆனால்…. இன்று …
அன்று போல் இல்லையே..
திரும்பிப் பார்ப்போமே….
ஆயுதத்தை இல்லையே…
ஆயுதத்தால் உனை காத்தவரை…
ஆயுதத்தால் வீழ்ந்தவரை …
ஆயுதத்தால் உடலுறுப்பு
இழந்த வரை….
பதினொரு வருடங்களாய்…
மனச்சிறைக்குள் சிறைவாசம்…
தனிமையில்..
இரவின் இருளில்..
விழிந்தெழுந்திடும் ….
நீதிவானாய் மனச்சாட்சி.
கேட்கும் கேள்விகளுக்கு..
நான் மட்டும் உயிர் தப்பி…
குற்ற உணர்வாய்…
பதிலாய். …. பதிலின்றி
அடிவயிற்றிலிருந்து ….
சத்தமின்றி….கேவிவரும் ….
கண்ணீர் …சுடுநீராய்….
கை நனைத்து …காயும்…
விடை காண்போம்….
எம்மை தப்புவித்தவருக்கு
பதிலுரைப்போம்…

– சுபா திலீபன்.

%d bloggers like this: