Take a fresh look at your lifestyle.

முள்ளிவாய்க்கால் படுகொலை சாட்சி (பனைமரமும் பதுங்குக் குழியும்)

 

அய்யோ அய்யோ
அலறல் சத்தம் கேட்கிறது

தடுக்க முடியவில்லையே வெட்கப்படுகிறேன் நான் தமிழன் என்று

பன்னெடுங்காலம் தாக்குதல்களால் தலைகுனிந்தவன் திருப்பித் தாக்கியதால் தீவிரவாதி என்கிறான்

பனைமரம் சாட்சி சொல்கிறது முள்ளிவாய்க்காலில் பதுங்குக்குழிக்குள் நடந்த பாலியல் படுகொலைகளை

சிறார்களின் சிதைந்த உடல்களின் உளறல்களை
அங்கிருப்பது மண்துகள்கள் அல்ல இரத்தத் துளிகள்

மரண ஓலம் மௌணித்துப் போனது
கொத்துக் குண்டுகளால் மனித குலம் நாசமானது

ஒரே நாளில் பல்லாயிரம் பேர் பலியான பரிதாபம் நடந்த இடம் இந்த மண்

பச்சை உடையணிந்த பயங்கரவாதிகள் நச்சுக் குண்டுகளை வீசி மனித உயிரினங்களை
அழித்தொழித்த அவமானம் நடந்த பூமி

 

துப்பாக்கி தோட்டா துளைத்த துவாரத்தில் சிங்களக் கொடியை சொருகி இருக்கிறான்
எனக்கு நெஞ்சு வலிக்கிறது அப்புறப்படுத்துங்கள்

என் தேகத்தைப் பாருங்கள் சிதிலமடைந்திருப்பதை
கரும்புகையாலும் இரத்தக் கறையாலும் படிந்திருப்பதை
பனைமரம் பட்ட மரமாக இருக்கிறேன்
செல்லடித்து செதில்கள் இழந்தேன்

உயிர் வாழ்கிறேன் நீரை உறிஞ்சியல்ல
யுத்த பூமியின் இரத்தத்தை
உலகிற்கு உண்மையைச் சொல்ல இன்னும் உயிரோடு இருக்கின்றேன்

வாடும் பயிரைக் கண்டு வாடியவர்கள் நாங்கள் வதைக்கப்பட்ட போது எங்கே போனீர்கள்
எம் தொப்புள் கொடி உறவுகளே

அதோ தமிழ் அன்னை அழுகிறாள்
ஆறுதல் சொல்ல
ஐ  நா வே வா

இனிமேலாவது இருப்பாய் தமிழா நெருப்பாய்
இனி புலிக்கொடி பறக்க புது யுகம் படைப்போம்

தன்மானம் சுய மரியாதை பேசியவர்கள் எங்கே..?
எம் இனம் அழித்தொழித்த போது

சாதி மதம் துறந்து  தமிழராய்  ஒன்றிணைவோம்
தமிழ் இனத்தைக் காப்போம்
தமிழர் மானத்தை மீட்போம்
இருப்பாய் தமிழா நெருப்பாய்

– ஆவல்.கணேசன் –

%d bloggers like this: