முள்ளிவாய்க்கால் நினைவுநாள் - நியூசிலாந்து

breaking
வணக்கம்,
முள்ளிவாய்க்கால் நினைவுநாள் COVID-19 தொற்று காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையினரை உள்ளடக்கி நடாத்தவேண்டிய கட்டாயத்தால், நாம் திட்டமிட்டுருந்த இவ்வருட முள்ளிவாய்க்கால் நினைவுநாளை மாற்றியமைக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இந் நிலையிலும் முள்ளிவாய்க்கால் அவலத்தினை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவது தமிழர்களின் கடமை  என்பதால், நியூசிலாந்து தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் அங்கத்தவர்கள் ஒன்றிணைந்து தமிழீழ தேசிய கொடியேற்றி, 18/05/2020  மாலை 6.00 மணியிலிருந்து நிகழ்வுகள் நடாத்தப்படவுள்ளது.
நியூசிலாந்து நாட்டின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு இவ் நிகழ்வுகளை youtube தளத்தினூடாக நீங்கள் இணைந்து நேரடியாய் பார்வையிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், அதே நேரத்தில் நீங்களும உங்கள் வீடுகளில் முள்ளிவாய்க்கால் அவலத்தினை மனதில் நிறுத்தி, விளக்கேற்றி அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நீங்கள் உங்கள் இருப்பிடங்களில் பிற்பகல் 6:18 மணிக்கு விளக்கேற்றி அஞ்சலி செய்யும் புகைப்படங்களையோ, ஒளிப்படங்களையோ பின்வரும் Hashtag செய்து பொதுவெளி தளங்களில்(facebook, Instagram, whatsup, etc) பதிவிடலாம் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம். இது எம் தமிழ் இனத்தின்மீது நடந்த இனவழிப்பை  உலகுக்கு எடுத்து செல்லவும் உதவியாகவிருக்கும்.
Hashtags:
#May18
#TamilGenocide
#TamilGenocideRemembranceDay
தமிழரின் தாகம் தமிழீழ்த் தாயகம்.
நன்றி
 தமிழர்  ஒருங்கிணைப்பு குழு  நியூசிலாந்து