லுட்சேர்ன் அருள் மிகு துர்க்கை அம்மன் கோவிலில் நினைவு கூறப்பட்ட தமிழின அழிப்பு நாள்

breaking

குருதி தோய்ந்த எம் தாய்நிலத்தில் கொன்றொழிக்கப்பட்ட எம் உறவுகளை எழுச்சிபூர்வமாக நினைவுகூர வேண்டும் என்ற வகையில் லுட்சேர்ன் அருள் மிகு துர்க்கை அம்மன் ஆலயத்தில் தமிழின அழிப்பு நாள் நினைவு நினைவுகூரப்பட்டது.

பூசையைத் தொடர்ந்து தமிழின அழிப்பு நாள் நினைவு பொதுச்சுடரினை சுவிஸ் தமிழீழ விளையாட்டு துறை பொறுப்பாளர் திருக்குமார் அவர்கள் ஏற்றி வைத்தார்

இவ்வணக்க நிகழ்வில் பொதுமக்கள், சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு லுட்சேர்ன் மாநில பொறுப்பாளர்கள் , செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு வணக்கம் செலுத்தினர். நிகழ்வில் கோணேஸ் காவியனின் முள்ளிவாய்க்கால் என்ற பேச்சும், சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு லுட்சேர்ன் மாநில பொறுப்பாளர் கோணேஸ் அவர்களின் உரையும், முன்னால் போராளி சுஜீவனின் உரையும் இடம்பெற்றது. முள்ளிவாய்க்கால் மண்ணில் புதையுண்டவர்களின் கைகள் இரத்த காயங்களுடன் தமிழீழத்தை மேலே தாங்கி பிடிப்பது போன்று துர்க்கை அம்மன் ஆலயத்தின் நிர்வாக உறுப்பினர் முருகதாஸ் வடிவமைத்திருந்தார்.

இறுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி அனைவருக்கும் வழங்கப்பட்டது.

[video width="640" height="352" mp4="http://www.thaarakam.com/wp-content/uploads/2020/05/IMG_8825.mp4"][/video]

[video width="640" height="352" mp4="http://www.thaarakam.com/wp-content/uploads/2020/05/IMG_8837.mp4"][/video] [video width="640" height="352" mp4="http://www.thaarakam.com/wp-content/uploads/2020/05/IMG_8832.mp4"][/video] [video width="640" height="352" mp4="http://www.thaarakam.com/wp-content/uploads/2020/05/IMG_8848.mp4"][/video]

[video width="640" height="352" mp4="http://www.thaarakam.com/wp-content/uploads/2020/05/IMG_8856.mp4"][/video]