40 மில்லியனை கல்விக்காகவும் கிராமப்புற மாணவர்களின் கிரிக்கட் மேம்பாட்டுக்காகவும் செலவிடமுடிவு!

breaking
40 மில்லியன் டொலர் செலவில் நிர்மாணிக்கப்படவிருந்த ஹோமாகம சர்வதேச கிரிக்கட் மைதான திட்டத்தை நிறுத்துவதென்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர்கள் ரொசான் மகாநாம, குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்த்தன உள்ளிட்டவர்களுடன் அலரி மாளிகையில் வைத்து கலந்துரையாடியபோது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தளவு தொகை பணத்தை கொண்டு கிரிக்கட் மைதானம் அமைக்காமல், அதனை மாணவர்களின் கல்விக்காகவும் கிராமப்புற மாணவர்களின் கிரிக்கட் மேம்பாட்டுக்காகவும் செலவிடமுடியும் என்று கலந்துரையாடலின் போது முன்னாள் கிரிக்கட் வீரர்கள் பிரதமரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்தே குறித்த திட்டத்தை நிறுத்த முடிவெடுக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகம்அறிவித்துள்ளது.