ரஷ்ய இராணுவ ஹெலிக்கொப்டர் விபத்து – 4 பேர் உயிரிழப்பு

breaking
ரஷ்யாவின் கிழக்கு பகுதி சுகோட்கா பிராந்தியத்தில் இராணுவ ஹெலிக்கொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் கிழக்கு பகுதி சுகோட்கா பிராந்தியத்தில் அனாடிர் துறைமுகத்திற்கு பாதுகாப்பு அமைச்சின் இராணுவ ஹெலிக்கொப்டர் பயிற்சிக்காக சென்ற போதே குறித்த விபத்து சம்பவித்துள்ளது. ஹெலிக்கொப்டரில் 3 வீரர்களும், ஒரு தொழில்நுட்ப வல்லுனருடனும் சென்ற இந்த ஹெலிக்கொப்டர் பயிற்சியை முடித்துக்கொண்டு சுகோட்கா பிராந்தியத்தின் அனாடிர் துறைமுகத்திற்கு திரும்பிய வேளை விபத்துக்குள்ளாகியுள்ளது. இது ரஷ்ய இராணுவத்துக்கு சொந்தமான ‘எம்.ஐ.8 ரக ஹெலிகொப்டர் என்பதுடன் விபத்துக்கான காரணம் ஹெலிக்கொப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறாக இருக்கலாம்” என்று பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை தெரிவித்துள்ளது. ஒரு வாரத்துக்குள் ரஷ்ய இராணுவ ஹெலிக்கொப்டர் ‘எம்.ஐ.8’ விபத்துக்குள்ளாவது இது 2 ஆவது முறையாகும். கடந்த 19 க்ஆம் திகதி தலைநகர் மொஸ்கோ அருகே உள்ள கிலின் நகரில் எம்.ஐ.8 ரக ஹெலிகொப்டர் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியதில் ஹெலிக்கொப்டரில் பயணம் செய்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.