ஊடகவியலாளர் மீது விசுவமடு பாரதிபுரம் பகுதியில் தாக்குதல் முயற்சி

breaking
  முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத மதுபான உற்பத்தி அதிகரித்துள்ள காரணத்தினால் பல சமூக சீர்கேடுகள் அதிகரித்துள்ளன. இன்னிலையில் 27.05.2020 இன்று மாலை வேளை விசுவமடு பாரதிபுரம் பகுதியில் அதிகரித்து செல்லும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் சமூக சீர்கேடுகள் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் ஒருவர் மீது மதுபோதையில் நின்ற கிராமவாசி ஒருவர் தாக்க முற்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட விசுவமடு மேற்கு மற்றும் றெட்பான,பாரதிபுரம்,பகுதிகளில் அதிகரித்து செல்லும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நடவடிக்கை அதிகரித்துள்ளதாகவும் இதனால் பல்வேறு சமூகசீர்கேடுகளில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் இது தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் ஒருவர்மீது சட்டவிரோத கசிப்பு உற்பத்தி பாவனை விற்பனையுடன் சம்மந்தப்பட்ட ஒருவர் மதுபோதையில் தாக்க முற்பட்டுள்ளார். குறித்த நபர் ஊடகவியலாளரை தங்கள் கிராமத்தில் இருந்து வெளியேறுமாறு தாக்க முற்பட்ட வேளை அருகில் நின்றவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். இன்னிலையில் வீட்டிற்கு சென்று மண்வெட்டி எடுத்துக்கொண்டு ஊடகவிலயார் மீது தாக்க முற்பட முயற்சித்த வேளை குறித்த ஊடகவியலாளர் பொலீசாருக்கு தகவல் கொடுத்து விட்டு சம்பவ இடத்தில் நின்று விலகிசென்றுள்ளதாகவும் இது தொடர்பில் குறித்த ஊடுகவியலாளர் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தாத நிலையில் பல்வேறு குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.