புகைப்படக்காரரின் வித்தியாசமான  சிந்தனையால்  60 ரூபாவுடன் குவியும் வாடிக்கையாளர்

breaking
  மாஸ்க்கில் முகத்தின் புகைப்படத்தை அச்சிட்டுத்தருகிறார் கேரளாவை சேர்ந்த புகைப்படக்கலைஞர் ஒருவர். கேரளாவின் கோட்டையம் பகுதியை சேர்ந்தவர் பினேஷ் பால். இவர் போட்டோ ஸ்டூடியோ நடத்திவருகிறார். ஊரடங்கு காரணமாக பல நாட்கள் தன் ஸ்டூடியோவை மூடி வைத்துள்ளார். சமீபத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது ஸ்டூடியோவை திறந்தபோதும் வாடிக்கையாளர்கள் அதிகம் வராததால் சோர்வடைந்த பினேஷிற்கு வித்தியாசமான யோசனை ஒன்று தோன்றியுள்ளது. அதாவது, ஒருவர் அணியும் மாஸ்க்கில் அவரது புகைப்படத்தை அச்சிட்டுக் கொடுக்க முடிவுசெய்தார் பினேஷ். அவரது யோசனை வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வெள்ளை நிற மாஸ்கில், வாடிக்கையாளரது புகைப்படத்தை மாஸ்க்கின் அளவிற்கு வெட்டி எடுத்து பிரத்யேக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர்களது புகைப்படத்தை மாஸ்கில் அச்சிட்டுத்தருகிறார் பினேஷ். வெறும் 15 நிமிடங்களில் இந்த வேலை முடிவதால் வாடிக்கையாளர்கள் பலர் இவரது கடையை நாடத்தொடங்கியுள்ளனர். ஒரு மாஸ்க்கின் விலை 60 ரூபாயாக இருப்பதால் பலரும் விரும்பி இதனை வாங்கிச்செல்வதாக கூறுகிறார் பினேஷ். “குழந்தைகள் பெரும்பாலும் கார்டூன் படம் போட்ட மாஸ்க்கை விரும்புகின்றனர். இளைஞர்கள் பைக், கார் போன்ற படங்கள் அச்சிட்ட மாஸ்க்கை விரும்புகின்றனர். பெண்களோ, சேலை டிசைன்கள் அச்சிட்ட மாஸ்க்கை விரும்புகின்றனர். அதே சமயத்தில் வயது அதிகமானவர்கள் முகத்தின் புகைப்படம் அச்சிட்ட மாஸ்க்கை விரும்புகின்றனர். இந்த மாஸ்கை அணிவதால் அனைவராலும் எளிதாக அடையாளம் காணமுடியும்” என தன்னுடைய புதிய யோசனை குறித்து மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார் பினேஷ்.