கொரொனாவை விட அதிபயங்கர வைரஸ்கள் சீனாவின் ஆய்வகத்தில்: வௌவால் பெண் எச்சரிக்கை

breaking
  சீனாவில் கொரோனா வைரஸ் தொடங்கிய காலத்திலேயே முதன்முதலில் அந்த வைரஸின் மரபணுவை கண்டறிந்தவர் வௌவால் பெண்மணி என்று அழைக்கப்படும் ஷீ ஜெங்லி. இவர் முதன் முதலில் உலக நாடுகளையும் எச்சரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் தற்போது கூறியுள்ள செய்தியானது உலக மக்களை பெரிதளவில் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது வூஹான் ஆய்வகத்தில் கொரோனா வைரஸை காட்டிலும் பன்மடங்கு அதிபயங்கரமான வைரஸ்கள் பாதுகாக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார். இந்த வைரஸ் களிலிருந்து உலக மக்களை காப்பாற்றுவதற்காக நிச்சயமாக உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அரசியல் காரணங்களுக்காக அறிவியல் ஆராய்ச்சிகள் பயன்படுத்தப்படுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. வைரஸ்களில் துவங்கப்படும் ஆராய்ச்சிகளுக்கு அரசாங்கமும், ஆராய்ச்சியாளர்களும் தங்களுடைய கண்டுபிடிப்புகளை வெளிப்படையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் ஆராய்ச்சியாளர்கள் அரசாங்கத்திற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். உலகம் முழுவதையும் ஆட்டி படைத்து வரும் இந்த கொரோனா வைரஸ் போன்று பிற்காலத்தில் ஒரு தொற்றுநோய் பரவாமல் இருப்பதற்கு, உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அவற்றை பற்றி முன்கூட்டியே அறிந்து அதற்கேற்றவாறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி விலங்குகள் தொடர்பில் ஆய்வு செய்வது மிகவும் அவசியமானதாகும். இதிலிருந்து நாம் தவறினால் நிச்சயமாக கொரோனா வைரஸை காட்டிலும் பன்மடங்கு கொடிய வைரஸ் தொற்றுக்களை வருங்காலத்தில் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த செய்தியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.