விடுதலைப் புலிகளிடம் 15000 இந்தியப்படையினரை இழந்தோம்: இந்திய முன்னாள் அமைச்சர் பேட்டி

breaking
  இலங்கை தொடர்பிலான இந்தியாவின் கொள்கைகள் காரணமாக 15 ஆயிரம் இந்தியர்களை இழந்ததாக இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் நட்வார் சிங் இந்தியாவின் ஹெட்லைன்டுடோ தொலைக்காட்சிக்கு கடந்த காலங்களில் வழங்கியிருந்த பேட்டி தற்போது இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய மத்திய அரசாங்கத்தின் அமைச்சரவையில் கலந்தாலோசிக்காமலேயே இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, இலங்கைக்கு அமைதிப்படைகளை அனுப்பினார். இலங்கை விடயத்தை ராஜீவ் காந்தி தவறாக கையாண்டார். இதன் காரணமாகவே இலங்கையில் 15 இந்தியர்களை இழந்தோம். யாழ்ப்பாணம் குடாநாட்டின் புவியியல் மற்றும் விடுதலைப் புலிகள் தொடர்பான புரிதல்கள் இல்லாமாலேயே இந்திய அமைதிப்படையினர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னேற்பாடுகள் இன்றியே அமைதிப்படையில் இலங்கை விடயத்தில் பொறுப்புகளை ஏற்றனர். அன்றைய இலங்கைக்கான இந்திய தூதுவர் திக்ஷிட் எழுதிய புத்தகத்தில் இந்த விடயங்கள் தெளிவாக இருக்கின்றன. இதனை படியுங்கள். இலங்கையில் நாம் 15 ஆயிரம் பேரை இழந்தோம். இலங்கை தொடர்பான இந்தியாவிடம் ஒருங்கிணைப்பின்றி காணப்பட்ட கொள்கைகளே இதற்கு காரணம். இந்திய பிரதமர், மத்திய அரசு, வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, புலனாய்வு பிரிவுகள். சி.பி.ஐ. இலங்கை விடயம் தொடர்பிலான வெவ்வேறான கொள்கைகளை கொண்டிருந்தன. தமிழக முதல்வர் எம்.ஜீ.ஆர். இலங்கை தொடர்பாக தமிழகத்தின் தனியான கொள்கையை கொண்டிருந்தார். அனைத்து துறைகளிலும் சிக்கலாக காணப்பட்டன. இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன, இந்தியா எத்தனை கொள்கைகளை கொண்டுள்ளது என இந்திய தூதுவர் திக்ஷிடம் கேட்டிருந்தார். இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கை தொடர்பான பிரச்சினைகள் இறுதியில் ராஜீவ் காந்தியின் படுகொலை முடிந்தது எனவும் நட்வார்சிங் குறிப்பிட்டுள்ளார்.