ரஷ்யாவில் வேகமாக பரவும் இரத்தம் உறிஞ்சும் உண்ணிகள்: மருந்தின்றி வைத்தியர்கள் திணறல்

breaking
  கொரோனா, வெட்டுக்கிளிகளைத் தொடர்ந்து ரஷ்யாவில் ரத்தம் உரிஞ்சும் உண்ணிகள் உருவாகி மக்களைத் துன்புறுத்தி வருகிறது... ரஷ்யாவில் பரிணாம வளர்ச்சியில் ரத்தம் உரிஞ்சும் உண்ணிகள் உருவாகியுள்ளது. இந்த உண்ணிகளால் காயப்பட்ட மக்களுக்குச் சிகிச்சை அளிக்க முடியாமல் ரஷ்யா மருத்துவர்கள் திணறி வருகின்றனர். இந்த வகை உண்ணிகள் ரஷ்யா, சைபீரியா நாடுகளில் அதிகளவில் இப்போது பெருகி வருகிறது. இந்த உண்ணிகள் மக்களைக் கடிப்பதால் பல ஆபத்துகள் ஏற்படுகிறது. இந்த உண்ணிகள் தாக்கிய மக்களுக்குச் சிகிச்சை வழங்க போதிய மருந்து இல்லாமல் ரஷ்யா திணறி வருவதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த உண்ணிகள் மக்ளை கடிப்பதால் சில நோய்கள் உருவாகுகிறது என மருத்துவர்களால் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக மனித மூளையில் ஒருவித வீக்கம் ஏற்படுகிறது.மேலும் இந்த உண்ணிகளிடம் கடிப் பெற்றவர்களின் நரம்பு மண்டலம், இதயம் உள்ளிட்டவை கடுமையாகப் பாதிக்கப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.   ரஷ்ய மருத்துவர்கள் அறிக்கையின்படி 8 ஆயிரத்து 215 பேர் இதுவரை இந்த வகை உண்ணிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2 ஆயிரத்து 125 பேர் குழந்தைகள்.   கொரோனா வைரஸ் தொற்றுக்கே இப்போது வரை மருந்து கண்டறியப்படாத நிலையில், இந்த வகை உண்ணிகளால் ஏற்படும் பாதிப்பைக் கையாள முடியாமல் ரஷ்யா, சைபீரியா நாடுகள் தவித்து வருகின்றனர். இப்போதைய சூழலில் இந்த உண்ணிகள் தொடர்பான ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.