தமிழ் தலைவர்கள் கூட எம்மைக் கண்டுகொள்ளவில்லை ஆதங்கப்படும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

breaking
பொதுத் தேர்தலுக்கு பின்னரும் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எந்தவொரு நீதியும் கிடைக்காதென தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்ரீலங்கா அரசாங்கம் தமக்கான நீதியை வழங்காதென வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத் தலைவி யோகராசா கனகரஞ்சனி வலியுறுத்தியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது ஸ்ரீலங்கா இராணுவத்திடம் சரணடைந்தும், கையளித்தும், கைது செய்யப்பட்ட நிலையிலும் எமது உறவுகள் காணாமலாக்கப்பட்டனர். உறவுகளை மீட்டுத் தருமாறு வலியுறுத்தி வடக்கு கிழக்கின் 8 மாவட்டங்களிலும் கடந்த 3 வருடங்களாக நீதிக்கான போராட்டங்கள் தொடர்கின்றன. இதேவேளை கடந்த நான்கு வருடங்களாக வீதியில் நின்று போராடிய தமக்கு நீதியை பெற்றுக் கொடுக்க தமிழ் அரசியல் தலைமைகள் கூட முன்வரவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.