கொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்த புதிய மாத்திரை!

breaking
கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ், உலக நாடுகளையெல்லாம் தொடர்ந்து தன் பரவலால் அலற வைத்து வருகிறது.
64 லட்சம் பேருக்கும் மேலாக இந்த வைரஸ் தொற்று பாதிப்பு இருக்கிறது. எவ்வளவோ சிகிச்சைகள் எடுத்துக்கொண்டும் பலனற்றுப்போய் 3 லட்சத்து 80 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்து இருக்கிறார்கள். அவர்களது இழப்பால் குடும்பத்தினர் மீளாத சோகத்தில் இருக்கிறார்கள்.
இங்கிலாந்தும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்தும், தடுப்பூசியும் கண்டுபிடிக்க போராடி வருகிறது. அங்கும் கூட கொரோனா வைரஸ் வெறித்தனமாக பரவி வருகிறது. அங்கு கிட்டத்தட்ட 2 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு இந்த தொற்று இருக்கிறது. ஏற்கனவே 39 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்கள். சிகிச்சை பெறுகிறவர்களை காப்பாற்றுவதற்கு என்ன வழி என மருத்துவ விஞ்ஞானிகளும் ஆராய்ந்து வருகின்றனர்.
இப்போது, அதில் ஒரு சிறிய திருப்பம் ஏற்பட்டிருக்கிறது
இந்தியாவில் மலேரியா மாத்திரையான ஹைட்ராக்சிகுளோரோகுயின் கொரோனா வைரஸ்களின் அளவை குறைக்கும் என கண்டறியப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இது தடுப்பு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.
இது போல இங்கிலாந்தில் பெரும்பாலும் வலி நிவாரணியாகவும், அழற்சி எதிர்ப்பு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிற இபுபுரூபன் மாத்திரை கொரோனா வைரஸ் சிகிச்சையில் பயன்படும் என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். காரணம், இது சுவாச பிரச்சினைகளுக்கு சிகிச்சையாக பயன்படும் என்ற நம்பிக்கை விஞ்ஞானிகளுக்கு வந்திருக்கிறது.
மிக குறைந்த விலையில் கிடைக்கிற இந்த மாத்திரைகளை சுவாச பிரச்சினையால் அல்லலுறுகிற கொரோனா நோயாளிகளுக்கு தருகிறபோது, வென்டிலேட்டர் என்னும் செயற்கை சுவாச கருவிகள் பொருத்த வேண்டிய நிலை ஏற்படாது என கருதுகிறார்கள்.
எனவே இப்போது லண்டன் கைஸ் ஆஸ்பத்திரி, செயிண்ட் தாமஸ் ஆஸ்பத்திரி, கிங் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி ஆகியவற்றை சேர்ந்த குழுவினர் இதில் நல்ல நம்பிக்கை கொண்டுள்ளனர்.
அந்த வகையில் கொரோனா வைரஸ் தொற்று உடையவர்களுக்கு லிபரேட் என்ற அழைக்கப்படும் சோதனை மூலம் வழக்கமான மருந்துகளுக்கு மத்தியில் கூடுதலாக இபு புரூபன் மாத்திரைகளை கொடுத்து பரிசோதிக்கப்போகிறார்கள் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிலும் குறிப்பாக மக்கள் வழக்கமாக வாங்குகிற வழக்கமான மாத்திரைகளை விட இபுபுரூபன் மாத்திரையின் சிறப்பு வடிவத்தை இந்த பரிசோதனையில் பயன்படுத்தப்போகிறார்கள். இது கீல்வாதம் போன்ற பிரச்சினைகளுக்கு சிலர் எடுத்துக்கொள்கிற லிபிட் கேப்ஸ்யூல் வடிவம் கொண்டதாக இருக்கும்.
ஏற்கனவே இதை விலங்குகளுக்கு கொடுத்து சோதித்து பார்த்திருக்கிறார்கள். அதில் அவற்றின் சுவாச பிரச்சினை சரியாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகிறபோது நோயாளிகள் சுவாச பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது. எனவே இது மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படுகிற சுவாச பிரச்சினைக்கும் தீர்வு தரும் என்ற கருத்து உருவாகி இருக்கிறது.
இதுபற்றி லண்டன் கிங் கல்லூரியை சேர்ந்த பேராசியரியர் மிதுல் மேத்தா கூறும்போது, “எங்கள் எதிர்பார்ப்புப்படி, ஆதாரங்கள் உண்மையில் பொருந்துகின்றன என்பதை காட்டுவதற்கு நாங்கள் சோதனை செய்து பார்க்க வேண்டியதிருக்கிறது” என்கிறார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தொடக்கத்தில், லேசான அறிகுறிகளுடன் இருப்பவர்களுக்கு இபு புரூபன் கொடுப்பது மோசமாக அமையலாம் என கருத்து எழுந்தது. பிரான்ஸ் சுகாதார மந்திரி ஆலிவர் வேரன் இபு புரூபன் போன்ற அழற்சி எதிப்பு மருந்துகளை உட்கொள்வது நோய்த்தொற்றை அதிகரிக்கக்கூடும் என்று கூறி, அதற்கு பதிலாக பாரசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
ஆனால், மனித மருந்துகள் ஆணையத்தின் மதிப்பாய்வு, பாரசிட்டமால் மாத்திரைகள் போலவே இபு புரூபன் மாத்திரையும் பாதுகாப்பானது எனறு தெரிவித்தது.
இந்த நிலையில்தான் இப்போது கொரோனா நோயாளிகளுக்கு இபு புரூபன் மாத்திரைகளை தந்து பரிசோதிக்கப்போகிறார்கள். இதில் வியக்கத்தக்க வகையில் பலன் இருக்கிறது என கண்டறியப்பட்டால் கொரோனாவால் ஏற்படுகிற சுவாச பிரச்சினைகளால் அல்லாடுகிறவர்களுக்கு வென்டிலேட்டர்களுக்காக திண்டாடுவது முடிவுக்கு வரும்.