சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வைத்தியர் கறுப்பு நிறமாக மாறி உயிரிழப்பு!

breaking
சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வைத்தியர் ஒருவரின் உடல் மெல்ல மெல்ல கருப்பு நிறமாக மாறிய நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். சீனாவில் முன்னணி வைத்தியரான ஹூ வெய்பெங் என்பவருக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இவருக்கு கடந்த ஜனவரி மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேபோல, இவருடன் வேலை செய்த மற்றுமொரு வைத்தியர் யி-பன் என்பவருக்கும் தொற்று உறுதியானது. இவர்களுக்கு தீவிரமான சிகிச்சை ஜனவரி மாதமே தரப்பட்டு வந்தது. ஆனால் இவர்களது உடலின் நிறம் கறுப்பானது. நிறம் மாறியது கண்டு அங்கிருந்த வைத்தியர்களே அதிர்ச்சியானார்கள். வென்டிலேட்டர் பொருத்தப்பட்டும், அதற்குள் இவர்களது கருத்த முகத்துடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஒருகட்டத்தில் வைத்தியர் ஹூ வெய்பெங்-கின் உடல்நிலையில் முன்னேற்றம் வந்தது. இன்னொரு டாக்டர் யி பன் உடல்நிலை தேறி மார்ச் மாதம் வீட்டுக்கு போய்விட்டார். ஆனால் டாக்டர் ஹூ வெய்பெங்-கிற்கு ஏப்ரல் மாதம் நிலைமை சீரியஸாகி விட்டது. அவரது மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. அவரை காப்பாற்ற வைத்தியர் எவ்வளவோ முயன்றும், அது முடியாமல் போய்விட்டது. டாக்டர் ஹூ பரிதாபமாக உயிரிழந்தார். சக டாக்டர்களுக்கு இது அதிர்ச்சியை தந்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில், வைத்தியர் ஹூ மரணமடைந்ததால், சீனாவுக்கு பின்னடைவாக இது பார்க்கப்படுகிறது.