கடற்புலி லெப். கேணல் ஆண்டான் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்

breaking
  கடற்புலி லெப். கேணல் ஆண்டான் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 05.06.2000 அன்று முல்லைத்தீவு மாவட்டம் சுண்டிக்குளம் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரின் இரண்டு அதிவேக டோறா பீரங்கிக் காலங்கள் மூழ்கடிக்கப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்புலி லெப். கேணல் ஆண்டான் உட்பட ஏனைய மாவீரர்களின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.   05.06.2000 அன்று ஆழ்கடல் விநியோக நடவடிக்கையில் ஈடுபட்ட படகுகளுக்கு பாதுகாப்பு வழங்கி அவ்விநியோகப்படகுகள் தளம் திரும்பிய பின்னர் சண்டைப்படகுகள் தத்தம் தளம் திரும்பிக் கொண்டிருந்த வேளையில் லெப் கேணல் ஆண்டான் தலைமையிலான சண்டைப்படகுத் தொகுதி மீது இலங்கைக் கடற்படையினரின் டோறாப்படகுகள் வழிமறித்துத் தாக்குதல் நடாத்த முற்பட்டவேளை அம்மறிப்புத் தாக்குதலை தமக்குச் சாதகமாகப் பயண்படுத்தியும் சிறப்புத் தளபதி சூசை அவர்களின் ஆலோசனையுடனும் லெப் கேணல் ஆண்டான் மறிப்புச் சமரை நடாத்திக்   கொண்டிருக்க  இவர்களுக்கு உதவியாக லெப் கேணல் பகலவன் மேஐர் ஆழியன் மற்றும் கடற்கரும்புலி லெப் கேணல் அமுதசுரபி ஆகியோர்களின் வழிநடாத்தலில் ஒரு முறியடிப்புத் தாக்குதலை மேற்கொண்டனர்.இத் தாக்குதலுக்கு உதவியாக மேலதிகமாக திருகோணமலையிலிருந்தும் காங்கேசன்துறையிலிருந்து வந்த டோறாப்படகுகள் மீதும் உக்கிர மோதல்கள் ஆரம்பிக்க ஒருகட்டத்தில் டோறாப் படகொன்று கடற்புலிகளின் சுற்றிவளைப்புக்கள் வந்து வசமாக மாட்டிக்கொண்டது .இதைக் கட்டளைமையத்திலிருந்து ராடர் மூலம் அவதானித்த சிறப்புத்தளபதி சூசை அவர்களின் ஆக்ரோசமான கட்டளைகளுக்கு செயல்வடிவம் கொடுத்த கடற்புலிகள் கடுமையாக போரிட்டு அவ்டோறாவை கனரக ஆயுதங்கள் மற்றும் ஆயுதங்களால் தாக்கி மூழ்கடித்தனர். தொடர்ந்த மோதலில் கடற்படையினருக்கு உதவியாக விமானப்படையினரும் தாக்குதல்களைத் தொடுத்தனர்.இவைகளுக்கும் மத்தியில் நடைபெற்ற கடும் கடற்சமரில் மற்றொரு டோறா சேதமடைந்து நிற்க அவ்டோறாமீது தாக்குதல் நடாத்தி மூழ்கடிக்கமுற்பட்டவேளையில் லெப்.கேணல் ஆண்டான் உட்பட சிலபோராளிகள் வீரச்சாவடைய ஏனைய சண்டைப்படகுகள் ஆண்டானின் சண்டைப்பகை மீட்டு தளம் திரும்பினர். ஆறு மணித்தியாலயமாக இடம்பெற்ற இவ் வெற்றிகரச் சமரில்.
லெப் கேணல் ஆண்டான். மேஐர் அமுதப்பிரியா. மேஐர் மதிவண்ணன். மேஐர் மருதா. கப்டன் சோபனா. கப்டன் சத்தியரூபி. கப்டன் இளஞ்சேரன். கப்டன் குயில் மாறன். கப்டன் சேசிகா. லெப்டினன்ட் மதிவதனன். லெப்டினன்ட் குட்டிக்கண்ணன். 2ம் லெப்டினன்ட் கலைமுகிலன். வீரவேங்கை மதியழகன். ஆகியோர் வீரச்சாவடைந்தனர். தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”