நாட்டுப் பற்றாளர் அக்காச்சி அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு!

breaking
டென்மார்க் நாட்டில் கடந்த 08.06.2020 திங்கட்கிழமை மாரடைப்பால் சாவடைந்த நாட்டுப்பற்றாளர் செல்வராசா பொன்னுத்துரை (அக்காச்சி – வயது 57) அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு   (11.06.2020) வியாழக்கிழமை காலை 10.00 மணி முதல் டென்மார்க் VIBORG நகரில் இடம்பெற்றது. நாட்டுப்பற்றாளர் செல்வராசா பொன்னுத்துரை அவர்களின் புனித உடலுக்கு தமிழீழத் தேசியக் கொடி போர்த்தப்பட்டு மதிப்பளிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகத்தின் அறிக்கையும் வாசித்தளிக்கப்பட்டதுடன் பல முக்கிய செயற்பாட்டளர்களின் இறுதிவணக்க உரைகளும் இடம்பெற்றன.