செவ்வாய்க் கிரகத்தைச் சுற்றி திடீரென உருவாகிய பச்சை நிற வளையம்

breaking
செவ்வாய்க் கிரகத்தைச் சுற்றி புதிதாக பச்சை நிறத்தில் வளையம் ஒன்று தோன்றி இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். பச்சை நிறத்தில் மினு மினுத்துக் கொண்டே, பார்க்கவே கண்ணை கவரும் வகையில் இந்த வளையம் இருக்கிறது. ஐரோப்பா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இணைந்து அனுப்பிய டிஜிஓ எனப்படும் Trace Gas Orbiter (TGO) சாட்டிலைட் மூலம் இந்த வளையம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமிக்கு வெளியே வேறு ஒரு கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் வளையம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான காரணத்தை தற்போது ரஷ்யா - ஐரோப்பா விஞ்ஞானிகள் விளக்கி உள்ளனர். இந்த வளையம் அந்த வளிமண்டலத்தில் இருக்கும் ஒக்சிசன் காரணமாக ஏற்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள். இந்த ஒக்சிசன் சூரிய ஒளி காரணமாகவும், அழுத்தம் காரணமாகவும் துள்ளி குதிக்கிறது. இதனால் அது ஒரு பச்சை வளையமும் போல மாறுகிறது. அதேபோல் சூரியனில் இருந்து செவ்வாய் கிரகம் நோக்கி வரும் கதிர்கள், மூலக்கூறுகள் செவ்வாயில் உள்ள வளிமண்டலத்தில் இருக்கும் மூலக்கூறுகள் ஒன்றாக மோதிக்கொள்ளும். இதன் காரணமாக இந்த வளையம் தோன்றுகிறது. பூமியிலும் கூட இதனால் வளையம் உள்ளது. ஆனால் அது வேறு மாதிரி இருக்கும். அதேபோல் பூமியில் இருக்கும் காந்த புலம் காரணமாக அதன் பண்புகள் பெரிய அளவில் பாதிக்கப்படும். பூமியில் காணப்படும் இந்த வளையம் இரவு நேரத்தில்தான் தெரியும். செவ்வாயில் இருக்கும் ஒக்சிசன் காரணமாக இந்த வளையம் தோன்றி உள்ளது. ஆனால் இதன் அர்த்தம் அங்கு மனிதர்கள் வாழலாம் என்பது அல்ல. அங்கு இருக்கும் ஒக்சிசன் காரணமாக மனித வாழக்கைக்கு எல்லாம் வாய்ப்பு இல்லை. ஆனால் இந்த வளையம் காரணமாக செவ்வாய் கிரகம் குறித்து மேலும் தெரிந்து கொள்ள முடியும். அதன் பண்புகளை ஆராய்ச்சி செய்ய முடியும். இந்த வளையம் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் பார்த்தால் மிக பெரிதாக தெரிகிறது. அதனால் இதன் காரணம் தெரியவில்லை. இது இன்னும் 40 வருடங்கள் இப்படி தெரிய வாய்ப்பு உள்ளது. அதேபோல் செவ்வாயில் தரையில் இருந்து 80 கிமீ தூரத்தில் இந்த வளையம் உள்ளது, என்று கூறியுள்ளனர்.